போலீஸ் எனக் கூறி காதலன் கண் முன்பாக காதலி பலாத்காரம்: ஹைதராபாத்தில் அட்டூழியம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் காதலனை அடித்து, உதைத்து விட்டு இளம்பெண்ணை 2 வாலிபர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள பெத்தா அம்பர் சேட் என்ற இடத்தில் 22 வயது இளம்பெண் தனது காதலனுடன் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். தங்களை போலீஸ் எனக்கூறி அந்த பெண்ணின் காதலனை அடித்து உதைத்தனர்.
பின்னர் அந்த இளம் பெண்ணை விசாரணை என்ற பெயரில் ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து 2 வாலிபர்களும் அந்த பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்தனர்.
தாங்கள் பலாத்காரம் செய்ததை இருவரும் தனித்தனியாக செல்போனில் படம் எடுத்தனர். அதோடு அந்த பெண்ணின் செல்போனை பிடுங்கி அதன் நம்பரை மிஸ்டு கால் மூலம் தங்களது செல்போனில் பதிவு செய்து கொண்டனர்.
பின்னர் அந்த பெண்ணை விடுவித்த அவர்கள், ‘‘நாங்கள் கூப்பிடும் போதெல்லாம் வரவேண்டும். இது பற்றி போலீசிலோ அல்லது யாரிடமாவது புகார் செய்தால் செல்போனில் உள்ள பலாத்கார காட்சியை இணைய தளத்தில் பரப்பி விடுவோம்'' என்று மிரட்டிவிட்டு தப்பி விட்டனர். கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்தது.
பயந்து போன காதல் ஜோடிகள் இது பற்றி யாரிடமும் புகார் செய்யாமல் இருந்தனர். ஆனால் அந்த கயவர்கள் மறுநாள் செல்போனில் தொடர்பு கொண்டு அந்த பெண்ணை அழைத்தனர்.
இதனால் அந்த காதல் ஜோடி தனது நண்பர்களிடம் விவரத்தை கூறினார்கள். நண்பர்கள் அவர்களுக்கு தைரியமூட்டி ஹயத் நகர் போலீசில் புகார் செய்ய வைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணை கற்பழித்த சீனிவாசரெட்டி, லிங்காரெட்டி ஆகிய 2 பேரை கைது செய்தனர். இளம் பெண்ணை கற்பழித்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர்.
அவர்களது செல்போனை பறிமுதல் செய்து பார்த்ததில் அதில் கற்பழிப்பு காட்சிகள் எதுவும் இல்லை. ஒருவேளை அதனை கம்ப்யூட்டருக்கு மாற்றி இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனை கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
கைதான 2 வாலிபர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications