காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை தீவைத்து எரித்த வாலிபர்
ஹைதராபாத்: ஆந்திராவில் தனது காதலை ஏற்காமல் வேறு ஒருவரை திருமணம் செய்யவிருந்த 18ம் வயது பெண்ணின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் நகரில் இருக்கும் வேணுமாதா சுவாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் ரேவதி(18). அவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த பெயிண்ட்டர் நவீன்(24) தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் காதலை ரேவதி ஏற்கவில்லை. இதையடுத்து அவர் ரேவதிக்கு சில காலமாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ரேவதிக்கு திருமணம் நிச்சயமானது. இது குறித்து அறிந்த நவீன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை மிரட்டியுள்ளார். இதையடுத்து நேற்று ரேவதியின் வீட்டுக்குள் நுழைந்த நவீன் அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த ரேவதி காக்கினாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ள ரேவதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நவீனை தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications