9ம் வகுப்பு மாணவியிடம் அசிங்கமாக நடந்து கொண்ட பெங்களூரு ஆசிரியர்
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஒரு பிரபலமான பள்ளிக் கூடத்தில், 9ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆசிரியர் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அந்த ஆசிரியரின் பெயர் லட்சுமிகாந்த் (40). கடந்த ஜனவரி மாதம் இவர் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

உடனடியாக பெற்றோர் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறினர். இதையடுத்து அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. ஆனால் இதுகுறித்து போலீஸாருக்கு பள்ளி நிர்வாகம் புகார் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மாணவியின் உறவினர் ஒருவர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், அதற்குள்ளாக லட்சுமிகாந்த் தலைமறைவாகி விட்டார். அவர் பெங்களூரை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
அவரைத் தேடி வரும் போலீஸார் தற்போது பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி வருகின்றனராம்.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications