ஆந்திராவில் திருமண வீட்டில் உறவுக்கார சிறுமிகள் மூவரை கடத்தி, எரித்துக் கொன்ற நபர்
ஹைதராபாத்: ஆந்திராவில் தனக்கு திருமணம் நடக்காத விரக்தியில் ஒருவர் தனது உறவினர்களின் 3 மகள்களை கடத்தி எரித்துக் கொலை செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் துப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுபதி ரெட்டி. விவசாயிகள் தலைவர். அவரது பேத்திகள் ஸ்ரீ(9), அக்ஷயா(6) மற்றும் குஷி(4) ஆகியோர் நிஜாமாபாத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். அந்த திருமண விழாவில் அவர்களின் உறவினரான நரேந்திர ரெட்டியும்(37) கலந்து கொண்டார்.
நரேந்திர ரெட்டி தனக்கு இன்னும் திருமணம் ஆகாத விரக்தியில் உள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக முன்பு மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் அவர் அந்த 3 சிறுமிகளையும் சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி கடத்திச் சென்று எரித்துக் கொலை செய்துவிட்டார். இதற்கிடையே சிறுமிகளை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சிறுமிகளை தேடியபோது அவர்களின் எரிந்த உடல்கள் நிஜாமாபாத் நகருக்கு வெளியே கிடப்பது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நரேந்திர ரெட்டியை தேடி வருகின்றனர். அவருக்கு திருமணமாகாத விரக்தியுடன், நிதி பிரச்சனையும் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications