ரம்ஜான் பரிசாக முஸ்லிம்களுக்கு 2 லிட்டர் பால்.. யாதவர்களுக்கு லாலு வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: யாதவர்கள் தங்கள் இஸ்லாமிய நண்பர்களுக்கு ரம்ஜான் பரிசாக 2 லிட்டர் பால் கொடுக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

கட்சியின் நிறுவன தின விழாவில் பேசியபோது லாலு இவ்வாறு தெரிவித்தார். ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம் நண்பர்களுக்கு யாதவர்கள் 2 லிட்டர் பால் வழங்கிவிட்டு, அவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ளுமாறு லாலு கூறினார்.
மேலும் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்களை வெளியிட வேண்டும் என்று கட்சி சார்பில் இயக்கம் முன்னெடுக்கப்படும் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications