Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இப்படி" இருந்தால் குழந்தை பெற முடியுமா.. எம்பி பக்ருதீன் பேச்சு.. பங்களாதேஷூக்கு போங்க.. எகிறிய பாஜக

அசாம் எம்பி பக்ருதீன் பேச்சுக்கு பாஜக எம்எல்ஏ கண்டனம் தெரிவித்ள்ளார்

Subscribe to Oneindia Tamil

டிஸ்பூர்: அசாம் மாநில எம்பி ஒருவரின் சர்ச்சை பேச்சு, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.. இதற்கு பாஜக எதிர்வினையாற்றி வருவதுடன், அந்த எம்பிக்கு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

மத்திய மற்றும் கீழ் அஸ்ஸாமின் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் பங்களாதேஷில் இருந்து குடியேறிய முஸ்லிம்களாக கருதப்படுகிறார்கள்..

புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அஸ்ஸாமின் 3.12 கோடி மக்கள்தொகையில் 31 சதவீதத்தினர் இருக்கிறார்கள்.. மேலும், 126 சட்டமன்ற இடங்களில் 35 இடங்களை தீர்மானிப்பதில் இவர்கள்தான் முக்கிய காரணியாகவும் விளங்குகிறார்கள்.

கண்ணியம்

கண்ணியம்

பிஸ்வா சர்வமா முதல்வராக அங்கு பொறுப்பேற்று, ஒரு மாசம் ஆகியிருந்தபோது ஒரு விழா நடந்தது.. அந்த விழாவில் பிஸ்வா பேசும்போது, மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் பிரச்சினைகளை சந்திக்கும் சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு அரசுக்கு இப்போது மிகவும் தேவைப்படுகிறது. கண்ணியமான குடும்ப கட்டுப்பாட்டுக் கொள்கையை, சிறுபான்மை சமூக மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. இதுபோல, கடந்த சில காலமாகவே, இஸ்லாமிய பெண்களின் திருமண வயது குறித்து விவாதங்களும் வெடித்து கிளம்பி வருகின்றன.

 18+ கல்யாணம்

18+ கல்யாணம்

இப்படிப்பட்ட சூழலில், அசாம் எம்.பியான பத்ருதீன் அஜ்மல் என்பவர், இந்து மதத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்... டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டி தந்த அவர், "இஸ்லாமியர்களின் மக்கள்தொகை உயர்வதை போல, இந்துகளுக்கும் மக்கள்தொகை உயர வேண்டுமானால், இஸ்லாமியர்கள் போலவே, தங்களது மகள்களுக்கு 18-20 வயதிலேயே கல்யாணம் செய்து வைத்து விடுங்கள்.. இஸ்லாமியர்களின் மக்கள்தொகை உயரும் வேகத்திற்கு, இந்துகளின் மக்கள்தொகை உயராதது, அவர்களுக்கு பெரும் பிரச்னையாகவே இருக்கிறது.

 2, 3, உறவு

2, 3, உறவு

இந்துகள் சரியான வயதில் திருமணம் செய்ய மாட்டார்கள்... அவர்கள் 2-3 பேருடன் உறவில் இருப்பார்கள்.. ஆனால் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்... குடும்ப அழுத்தத்தின் காரணமாக அவர்கள் 40 வயதில்தான் கல்யாணம் செய்துகொள்கிறார்கள்... இப்படி இருந்தால் அவர்களால் எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள இயலும்? நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்.. ஆனால், நம் இஸ்லாமிய சமூகத்தில், பெண்கள் 18 வயதை அடைந்தவுடனேயே அவங்களுக்கு கல்யாணம் செய்து வைக்கப்படுகிறது... இந்திய அரசும் அதனை அனுமதிக்கிறது...

 தரிசாகிடுச்சோ

தரிசாகிடுச்சோ

இளைஞர்களுக்கு 22 வயதில் கல்யாணம்.. அதனால்தான், நம்முடைய மக்கள்தொகை அதிவேகமாக உயர்கிறது. எனவே, இந்துகளுக்கும் இஸ்லாமியர்களின் வழியை பின்பற்றி, 18 வயதில் அவர்களின் மகளுக்கு திருமணம் முடித்துவைக்க வேண்டும். தரிசு நிலத்தில் சாகுபடி செய்ய இயலாது.. அதற்கு விளை நிலம்தான் வேண்டும்" என்று பேசியிருந்தார். பக்ருதீனின் இந்த பேச்சு பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது.. ஆளும் கட்சியான பாஜக உடனடி கண்டத்தை தெரிவித்து, பக்ருதீனுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

 அம்மா தங்கச்சி

அம்மா தங்கச்சி

இதுகுறித்து, அசாம் பாஜக எம்எல்ஏ கலிதா சொல்லும்போது, "இந்த மாதிரி ஒரு கருத்தை சொல்லி, உங்கள் அம்மா மற்றும் சகோதரி மீது அபாண்டமாக குற்றஞ்சாட்டுகிறீர்கள்... உங்களை கண்டிப்பது மட்டுமில்லாமல் எச்சரிக்கவும் செய்கிறேன்.. இனிமேல் இப்படியெல்லாம் நடந்துக்காதீங்க.. இதை நீங்கள் தொடர வேண்டும் என்றால் வங்கதேசம் சென்று, அங்கே போய் செய்துகொள்ளுங்கள்... இந்துகள் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்... கீழ்தரமான அரசியலுக்காக உங்களின் தாய் மற்றும் சகோதரியின் மானத்தை விற்று, அவர்களின் கண்ணியத்தை சீர்குலைக்க வேண்டாம்.

சீதாராமன்

சீதாராமன்

நீங்கள் இஸ்லாமியர்.. நாங்கள் இந்துக்கள்... நாங்கள் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டுமா? இது ராமர் மற்றும் சீதையின் நாடு... இங்கு வங்கதேசத்தினருக்கு இடம் கிடையாது... நாங்கள் இஸ்லாமியர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள மாட்டோம்" என்று கொந்தளிப்புடன் சொல்லி உள்ளார்.. பத்ருதீன் அஜ்மலின் கருத்து இப்போது சமூகவலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதுடன், சுடச்சுட விவாதங்களையும் கிளப்பி விட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+