முதல்முறை.. கோவாவில் கிறிஸ்துவ வேட்பாளர்களுக்கு இடங்களை அள்ளிக்கொடுத்த பாஜக.. பரபர பிளான்!
பஞ்சிம்: கோவா சட்டசபை தேர்தலில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் மிக அதிக இடங்களை பாஜக கிறிஸ்துவர்களுக்கு ஒதுக்கி உள்ளது. கோவாவில் கிறிஸ்துவ வாக்காளர்கள் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
5 மாநில சட்டபை தேர்தல்கள் நெருங்கி வருகிறது. இதில் கோவா மாநில சட்டசபை தேர்தல் தொடக்கத்தில் இருந்து பல திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது. எந்த எம்எல்ஏ எந்த கட்சியில் இருக்கிறார் என்றே தெரியாத அளவில் நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சி மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
தேர்தல் முடிந்த பின் கட்சி மாற மாட்டேன் என்று கட்சி தலைமைகள் சத்தியம் வாங்கும் அளவிற்கு அங்கு நிலைமை மோசமாகி உள்ளது. பிப்ரவரி 14ம் தேதி கோவா மாநில சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடக்க உள்ளது.

கோவா பாஜக
இந்த நிலையில்தான் கோவாவில் பாஜக இந்த முறை அதிக அளவு கிறிஸ்துவ வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. அங்கு இருக்கும் 40 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிடுகிறது. இதில் 12 கிறிஸ்துவ வேட்பாளர்களை பாஜக களமிறக்கி உள்ளது. அதாவது மொத்த வேட்பாளர்களில் 30 சதவிகிதம் பேர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள். இதற்கு முன் எந்த தேர்தலிலும் பாஜக இத்தனை கிறிஸ்துவ வேட்பாளர்களை களமிறக்கியது கிடையாது.

பாஜக கிறிஸ்துவர்கள்
கடந்த 2012 சட்டசபை தேர்தலில் பாஜக 6 கிறிஸ்துவ வேட்பாளர்களை களமிறக்கியது. பாஜக அப்போது களமிறக்கிய 6 பேருமே அந்த தேர்தலில் வெற்றி பெற்றார்கள். 2017 சட்டசபை தேர்தலில் பாஜக 7 கிறிஸ்துவ வேட்பாளர்களை களமிறக்கியது. அதேபோல் அந்த தேர்தலிலும் பாஜக களமிறக்கிய 7 கிறிஸ்துவ வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். பாஜகவிற்கு அங்கு கிறிஸ்துவ வேட்பாளர்கள் எப்போதுமே வெற்றிகரமான போட்டியாளர்களாக இருந்துள்ளனர்.

கோவா தேர்தல்
கோவா பாஜகவில் அடிப்படை உறுப்பினர்களாக 3.5 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள். இதில் 18 சதவிகிதம் பேர் கிறிஸ்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவாவில் மொத்த மக்கள் தொகையில் 66 சதவிகிதம் பேர் இந்துக்கள். 25 சதவிகிதம் பேர் கிறிஸ்துவர்கள். அங்கு 20 தொகுதிகளில் கிறிஸ்துவர்கள்தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்திகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாஜக கிறிஸ்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
Recommended Video

பாஜக வேட்பாளர்கள் பட்டியல்
இது தொடர்பாக பாஜக கோவா தலைவர் சதானந்த ஷெட் தனவடே அளித்த பேட்டியில், பாஜக என்பது ஒரு மத ரீதியான கட்சி கிடையாது. எல்லா பிரிவினருக்கும் வாய்ப்பு கொடுப்பதை பாஜக விரும்பும். மைனாரிட்டிகளுக்கு சம உரிமை வழங்குவதை நாங்கள் விரும்புகிறோம். அனைவருக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம், என்று பாஜக கோவா தலைவர் சதானந்த ஷெட் தனவடே தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு பாஜக சார்பாக கிறிஸ்துவ வேட்பாளர்கள் யாரும் களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications