Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணீரில் கோவா.. முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவு.. முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட இறுதிச்சடங்கு!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இறுதி ஊர்வலம் -வீடியோ

    பானஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. மிராமர் பகுதியில் இவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

    நேற்று உடல்நலக்குறைவால் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். அவருக்கு வயது 63. கணைய புற்றுநோய் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இந்த சிகிச்சை அவருக்கு பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை.

    இதையடுத்து அவர் அமெரிக்கா சென்றார். கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.

    பணிகள்

    பணிகள்

    தொடர்ந்து அலுவலக பணிகளை செய்து வந்த அவர் நேற்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். உடல்நலக்குறைவிற்கு இடையில் இவர் முதல்வராக தன்னுடைய பணிகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேசிய துக்கம்

    தேசிய துக்கம்

    இவரது மறைவு காரணமாக தற்போது நாடு முழுக்க தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இன்று காலை 9.30-10.30 மணி வரை மனோகர் பாரிகரின் உடல் கோவா பஞ்சிம் பகுதியில் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

    பாஜக அலுவலகம்

    பாஜக அலுவலகத்தில் கட்சியினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் காலா அகாடமி பகுதிக்கு மக்களின் அஞ்சலிக்கு எடுத்து செலுத்தப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். 4 மணி வரை மக்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    பல தலைவர்கள்

    பிரதமர் மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பாஜக நிர்வாகிகள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். அரசியல் சாராத பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.

    உடல்

    உடல்

    அதன்பின் காலா அகாடமி பகுதியில் இருந்து மிராமர் பகுதியில் மாலை 5 மணிக்கு இவரின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு இவரது உடலுக்கு இறுதி மரியாதைகள் செலுத்தப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. அரசு மரியாதையுடன் இவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+