நான் பாட்டுக்கு தூங்கிட்டேன்.. அது பாட்டுக்கு போயிருச்சு.. "பலான" சிக்கலில் கோவா துணை முதல்வர்!
கோவா துணை முதல்வருக்கு புது சிக்கல் எழுந்துள்ளது
பனாஜி: "நான் ராத்திரி தூங்கிட்டு இருந்தேன்.. அதுவும் 1.20 மணிக்கு.. யாரோ என் நம்பரில் இருந்து ஆபாச வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்கள்" என்று கோவா துணை முதல்வர் விளக்கம் தந்தாலும், அதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன.. இதனால் பெரிய தலைவலியில் சிக்கி கொண்டுள்ளார் கோவா துணை முதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கர்!
கோவா பாஜக துணை முதல்வராக இருப்பவர் சந்த்ரகாந்த் காவ்லேக்கர்... காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்.. எனினும் பாஜகவில் 10 பேருடன் ஒருவராக இணைந்து அங்கு பாஜக ஆட்சியமைக்க மூலகாரணமாக இருந்தவர்.. இதற்கு பதில் விசுவாசமாக துணை முதல்வர் பொறுப்பு கொடுத்து பாஜக அவரை அழகுபார்த்து வருகிறது. கோவாவின் பரபரப்பான அரசியலுக்கு காரணம் சந்த்ரகாந்த் மீதான விமர்சனங்கள்தான்!

இவர் நேற்றிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, இவரது செல்போன் நம்பரிலிருந்து "VILLAGES OF GOA" என்ற வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச வீடியோ ஒன்று ஷேர் ஆகியுள்ளது.. அப்போது நடுராத்திரி 1.20 மணி!
இந்த விவகாரம் வெடித்து கிளம்பி உள்ளது.. கோவா முன்னணி கட்சியின் மகளிர் பிரிவினர், இந்த விவகாரம் தொடர்பாக மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளனர்.. அந்த புகாரின்பேரில் சந்த்ரகாந்த் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, துணை முதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கரும் இது தொடர்பாக கோவா சைபர் பிரிவு போலீசாரிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ஆபாச வீடியோ அனுப்பப்பட்ட விவகாரத்தின் பிண்ணனியில் ஹேக்கர்கள் இருப்பதாகவும், அந்த வீடியோ ஷேர் ஆன நேரத்தில் செல்போனை தான் பயன்படுத்தவே இல்லை என்றும், அந்த சமயத்தில் நன்றாக தூங்கி கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆபாச வீடியோ ஷேர் ஆன அந்த வாட்ஸ் அப் குரூப்பில் தானும் ஒரு உறுப்பினர் என்பதை சுட்டிக் காட்டியுள்ள அவர், தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ இப்படி செயல்பட்டுள்ளனர்... அவர்கள் யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த செயலுக்காக, துணை முதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யும்படி கோவா முன்னணி கட்சியின் மகிளா பிரிவினர் போலீஸ் ஸ்டேஷன் கதவை தட்ட, அரசியல் ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
"இது ஹேக்கர்களின் வேலை" என விளக்கம் அளித்தாலும், சைபர் பிரிவில் புகாரே தந்தாலும், எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை லேசில் விடுவதாக இல்லை என்பதால், சந்த்ரகாந்த்துக்கு சிக்கல் மேல் சிக்கல் அங்கு ஏற்பட்டு வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications