கோவாவில் தொங்கு சட்டசபையா… பாஜகவா…. ஆட்சியை பிடிக்கப் போவது யார்?
கோவாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தொங்கும் சட்டசபை அமையும் என்றும் பாஜகதான் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறப்பட்டன. இன்றும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் உண்மை நி
பானாஜி: கோவா சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. ஒரே கட்டமாக கடந்த 4ம் தேதி தேர்தல் நடைபெற்ற கோவா சட்டசபை தேர்தலில் வென்று இந்த முறை ஆட்சியை அமைக்கப் போவது யார்?
கோவாவில் மொத்தம் 40 தொகுதிகள். இந்த 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 4ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

கோவாவில் கடந்த சட்டசபை தேர்தலில் 28 இடங்களில் போட்டியிட்டு 21 இடங்களைப் பிடித்து ஆட்சியை அமைத்தது பாஜக. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வெறும் 9 இடங்களை மட்டுமே பெற்றது. இதனால் கூட்டணி அமைத்துக் கூட அதனால் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவானது.
இந்நிலையில், இந்த சட்டசபை தேர்தலில் பாஜக 36 இடங்களில் போட்டியிட்டுள்ளது. 4 இடங்களில் சுயேட்சைகளுக்கு ஆதரவு அளித்துள்ளது. 9ம் தேதி அனைத்து 5 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்ததையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன.
இதில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே இழுபறி நிலை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தொங்கும் சட்டசபை அமைய வாய்ப்பிருப்பதாக கருத்து கணிப்புகள் வெளியாகின. பல கருத்துக்கணிப்புகள் பாஜக 15ல் இருந்து 21 இடங்கள் வரை வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளன. காங்கிரஸ் கட்சி கோவா வடக்கில் 5 லிருந்து 9 இடங்களிலும், தெற்கில் 6 லிருந்து 10 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இந்த முறை நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட்டுள்ளது. இந்தக் கட்சி 3 லிருந்து 4 இடங்கள் வரை வெல்லும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
-
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications