கோவா தேர்தல் முடிவுகள்: பனாஜியில் தோல்வியிலும் "சாதனை" படைத்த பாரிக்கர் மகன் உத்பால்!
பனாஜி: கோவா மாநில சட்டசபை தேர்தலில் மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர் தோல்வி அடைந்துள்ளார். எனினும் சுயேச்சையாக போட்டியிட்டு காங்கிரஸ், திரிணாமூல், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் செய்ய முடியாத சாதனையை உத்பால் செய்துள்ளார்.
கோவாவில் 40 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 13 தொகுதிகளில் பாஜகவும், 17 தொகுதிகளில் காங்கிரஸும் 3 தொகுதிகளில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் வென்றது. அது போல் உள்ளூர் கட்சியான மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சி 3 தொகுதிகளிலும் வென்றது.

எத்தனை இடங்கள்
இந்த நிலையில் வெறும் 13 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக , அங்கிருக்கும் உள்ளூர் கட்சிகள், சுயேச்சைகளின் துணை கொண்டு ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதன்படி மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது. பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், தனது இறுதி மூச்சு வரை கட்சிக்காகவும் மக்களுக்காகவும் உழைத்தவர்.

மனோகர் பாரிக்கர்
கோவாவில் மக்கள் நல திட்டங்களை பார்வையிட சென்ற போது மூக்கில் டியூபுடன் மனோகர் பாரிக்கர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். இதனால் கோவாவில் அவருக்கு நல்ல பெயர் உள்ளது. இந்த தொகுதி கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் மனோகர் பாரிக்கரின் வசம் இருந்தது. பின்னர் 2015 ஆம் ஆண்டு மனோகரை மத்திய அமைச்சரவையில் இணைத்ததால் அவர் அந்த தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். 2017 இல் கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்றார்.

உத்பால்
இந்த நிலையில் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பிறகு அவர் போட்டியிட்டு வென்ற பனாஜி தேர்தலில் அவரது மகன் உத்பால் போட்டியிட விரும்பினார். பனாஜி தொகுதியுடன் தனது தந்தைக்கு இருக்கும் பிணைப்பை வைத்து அந்த தொகுதியில் போட்டியிட பாஜகவில் விருப்பமனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு அந்த தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதனால் உத்பால் பாரிக்கர் அக்கட்சியிலிருந்து விலகினார்.

சுயேச்சையாக களமிறங்கிய உத்பால்
அவருக்கு ஆதரவு தருவதாக ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன. ஆனால் அவர் எந்த கட்சியிலும் சேரவில்லை. பனாஜி தொகுதிக்கு பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட அடனாசியோ பாபுஷ் மான்ஸ்ரேட்டை எதிர்த்து சுயேச்சையாக உத்பால் களமிறங்கினார். உத்பால் பாரிக்கரின் வெளியேற்றம் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் பாஜக வேட்பாளரிடம் உத்பால் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
Recommended Video

தோல்வியிலும் சாதனை
பனாஜியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அடனாசியோ பாபுஷ் மான்ஸ்ரேட் மொத்தம் 6,787 வாக்குகள் பெற்று வென்றார். இவரது வாக்கு சதவீதம் 38.96 ஆகும். உத்பாலோ 6.071 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார். இவரை விட 716 வாக்குகளை அதிகம் பெற்றுள்ளார் பாஜக வேட்பாளர். உத்பாலின் வாக்கு சதவீதம் 34.85 சதவீதம். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எல்விஸ் கோம்ஸ் 3,175 வாக்குகளை பெற்றார். தோல்வியை சந்தித்தாலும் உத்பால், பாஜக வேட்பாளருக்கு கடுமையான டஃப் கொடுத்தார். காங்கிரஸ், ஆம் ஆத்மி, உள்ளூர் கட்சிகள் செய்ய முடியாததை உத்பால் சுயேச்சையாக போட்டியிட்டு செய்துள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications