கோவா "சோக" வரலாறு திரும்புகிறதா..? பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் சொல்வது இதைத்தான்!
பனாஜி: கோவாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் காங்கிரஸ்- பாஜக இடையே நெக் டூ நெக் போட்டி ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் சொல்கின்றன.
40 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 21 இடங்களில் வென்றிருக்க வேண்டும்.
கோவாவில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடியது. இந்த நிலையில் பல நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.

கருத்து கணிப்புகள்
அதை ஒட்டுமொத்தமாக வைத்து பார்க்கும் போது எந்த ஒரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லாத நிலையே உள்ளது. அதாவது கடந்த முறை போன்று இந்த முறையும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. கோவாவில் நிறைய செய்தி நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை நடத்திய நிலையில் தற்போது 8 நிறுவனங்களின் கணிப்பை பார்க்கலாம்.

இழுபறி
இடிஜி ரிசர்ச் பாஜக 17-20 இடங்களிலும் காங்கிரஸ் 15-17 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 3-4 இடங்களிலும் வெல்லும். இந்தியா நியூஸ் செய்தி நிறுவனத்தின் கருத்து கணிப்பில் பாஜக 13-19 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 14-19; இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 3-5 இடங்களிலும் வெல்லும்.

இந்தியா டிவி
இந்தியா டிவி- கிரவுண்ட் ஜீரோ ரிசர்ச் கருத்து கணிப்பின்படி பாஜக 10-14 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 20-25 இடங்களிலும் திரிணாமுல் 3-5 இடங்களிலும் வெல்லும். இந்த நிறுவனத்தின் கருத்து கணிப்பின் படி கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அது போல் இந்தியா டிவி- சி.என்.எக்ஸ் பாஜக 16-22 இடங்களிலும் ; காங்கிரஸ் 11-17 இடங்களிலும் திரிணாமுல் 1-2 இடங்களிலும் வெல்லும். அதாவது இந்த நிறுவன கருத்து கணிப்பின்படி பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும்.

நியூஸ் எக்ஸ்
நியூஸ் எக்ஸ் போல்ஸ்ட்ராட் கருத்து கணிப்பின்படி பாஜக 17-19 இடங்களிலும் காங்கிரஸ் 11-13 இடங்களிலும் வெல்லும். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களிலும் வெல்லாத நிலை ஏற்படும். ரிபப்ளிக் டிவி கணிப்பின் படி பாஜக 13-17 இடங்களிலும் காங்கிரஸ் 13-17 இடங்களிலும் திரிணாமுல் 2-4 இடங்களிலும் வெல்லும்.

டைம்ஸ் நவ் வீடோ
டைம்ஸ் நவ் வீடோ கருத்து கணிப்பின்படி பாஜக 14 இடஙகளிலும் காங். 16 இடங்களிலும் வெல்லும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறாது. ஜீ நியூஸ் கருத்து கணிப்பின்படி பாஜக 13-18 இடங்களிலும்; காங்கிரஸ் 14 முதல் 19 தொகுதிகளிலும் திரிணாமுல் 2-5 தொகுதிகளிலும் வெல்லும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications