கோவா மாநில லோக்சபா தேர்தல் முடிவுகள்.. காங்கிரஸ், பாஜக தலா ஒரு இடத்தில் வெற்றி.. முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

கோவா: கோவா மாநிலத்தில் இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆளுக்கு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

கோவா மாநிலத்தை பொறுத்தவரை லோக்சபா தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7 அன்று நடந்து முடிந்தது. கோவா மாநிலத்தை பொறுத்தவரை பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே நேரடிப் போட்டி உள்ள மாநிலம் ஆகும். இங்கு வடக்கு கோவா, தெற்கு கோவா என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.

Lok Sabha Election 2024 BJP Congress 2024 2024 goa

கோவாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என சனிக்கிழமை வெளியான கருத்துக்கணிப்பு தெரிவித்திருந்தன. இன்று வெளியாகும் இறுதி முடிவுகளில் ஒவ்வொரு கட்சியும் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றை வெல்லும் வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தன. ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளின்படி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒரு இடத்தைப் பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது.

பாஜக சார்பில் வடக்கு கோவா தொகுதியில் மாநில அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீபாத் யெசோ நாயக்கும், தெற்கு கோவா தொகுதியில் பல்லவி ஸ்ரீனிவாஸ் டெம்போவும் போட்டியியிட்டனர். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கோவாவின் முன்னாள் துணை முதல்வர் ரமாகாந்த் கலாப் களம் இறங்கினார். தெற்கு கோவா நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விரியாடோ பெர்னாண்டஸ் களம் இறங்கினார்.

கோவாவில் மொத்தம் 76 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த முறை வெல்லப்போவது பாஜகவா, அல்லது காங்கிரஸ் கட்சியா என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆளுக்கு ஒரு தொகுதியில் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருக்கிறார்கள். இதில் வடக்கு கோவாவில் வடக்கு கோவா தொகுதியில் மாநில அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீபாத் யெசோ நாயக் 257326 வாக்குகள் பெற்றதுடன், 116015 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். காங்கிரஸ் வேட்பாளர் கோவாவின் முன்னாள் துணை முதல்வர் ரமாகாந்த் கலாப் 141311 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையே பிடித்தார்.

தெற்கு கோவா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கேப்டன் விரியாடோ பெர்னாண்டஸ் 217836 வாக்குகள் பெற்றதுடன் பாஜக வேட்பாளரை 13535 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் . பாஜக வேட்பாளர் பல்லவி ஸ்ரீனிவாஸ் டெம்போ 204301 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையே பிடித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+