2 தலை! கோவாவில் மாஸ்டரை களமிறக்கிய காங்! கால் பதித்த கிங் மேக்கர் டிகே சிவக்குமார்! இதுதான் ட்விஸ்ட்
பஞ்சிம்: கோவா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தற்போது கோவாவில் களமிறங்கி உள்ளார். கோவாவில் ஏற்கனவே காங்கிரசின் இரண்டு முக்கிய தலைகள் இருக்கும் போது அங்கு டிகே சிவக்குமார் களமிறக்கப்பட்டுள்ளார்.
கோவா சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. கோவா சட்டசபை தேர்தலை பொறுத்தவரை அங்கு 40 இடங்களில் பிப்ரவரி 14ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அங்கு பெரும்பான்மை பெற 21 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
அங்கு பாஜக சார்பாக முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்த நிலையில் பிரமோத் சாவந்த் முதல்வராக பதவி ஏற்றார். இந்த நிலையில் கோவாவில் பாஜக தனியாக போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி கோவா பார்வர்ட் பார்டியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.

கோவா ஏன் முக்கியம்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு பக்கம் தனி கூட்டணி அமைக்க இன்னொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சி சுயேட்சைகளுடன் இணைந்து போட்டியிட்டது. பலமுனை போட்டி அங்கு நிலவிய நிலையில் தேர்தல் முடிவுகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவா சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ஏகப்பட்ட எம்எல்ஏக்கள் கட்சி மாறினார்கள். பல்வேறு எம்எல்ஏக்கள் காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு, பாஜகவில் இருந்து காங்கிரசுக்கும் மாறினார்கள்.

கட்சி மாற்றம்
கிட்டத்தட்ட எல்லா எம்எல்ஏக்களும் கட்சி மாறிவிட்டனர் என்று சொல்லும் அளவிற்கு அங்கு குதிரை பேரம் தீவிரமாக நடந்து எம்எல்ஏக்கள் அணி மாறிக்கொண்டு இருந்தனர். தங்கள் வேட்பாளர் எந்த கட்சியில் இருக்கிறார் என்றே தெரியாத அளவிற்கு அங்கு கோஷ்டி மோதல், கட்சி மாற்றம் போன்ற சம்பவங்கள் நடந்து வந்தன. இந்த நிலையில்தான் தேர்தலுக்கு பின்பும் அங்கு இதேபோல் எம்எல்ஏக்கள் அணி மாறும் வாய்ப்புகள் உள்ளன.

வேட்பாளர்கள்
இதனால் இப்போதே எம்எல்ஏக்களை பாதுகாக்கும் வகையில் அங்கு இருக்கும் கட்சிகள் தங்கள் உறுப்பினர்களை ரிசார்ட்டிக்கு கொண்டு சென்று உள்ளது. காங்கிரஸ் தனது 37 வேட்பாளர்களை அப்படியே அள்ளிக்கொண்டு போய் தனியாக வடக்கு கோவா ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்து உள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு ஏற்கனவே காங்கிரஸ் சார்பாக முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் தினேஷ் குண்டுவராவ் ஆகியோர் உள்ளனர்.

சிவக்குமார்
இருப்பினும் காங்கிரஸ் சார்பாக தற்போது டிகே சிவக்குமார் அங்கு களமிறக்கப்பட்டுள்ளார். டி கே சிவக்குமார் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர். ரிசார்ட் அரசியலில் அதிக அனுபவம் கொண்டவர். குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை காக்க இவர்தான் காரணமாக இருந்தார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை காக்கவும் (ஆட்சி கவிழும் முன்), ராஜஸ்தானில் ஆட்சி கவிழாமல் இருக்கவும் டிகேஎஸ் நிறைய வேலைகளை செய்து இருக்கிறார்.

2018
2018 கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக 105 இடங்களில் வென்றது. இருந்தாலும் காங்கிரசின் 78, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் 37 எம்எல்ஏக்களை வைத்து ஆட்சி அமைக்க காரணமாக இருந்தது டிகேஎஸ்தான். எல்லா எம்எல்ஏக்களையும் அப்படியே ரிஸார்ட்டிற்கு கூட்டி சென்று அவர்களை கட்டுக்கோப்பாக வைத்து, அங்கு ஆட்சி அமைத்தார். 2019ல் ஆட்சி கவிழும் வரை அமித் ஷாவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் டிகேஎஸ்.

கோவா
இந்த நிலையில்தான் கோவாவில் ரிசார்ட் அரசியல் தேவைப்படும் என்பதால்.. அங்கு ஏற்கனவே இரண்டு பெரிய தலைகள் இருந்தும் கூட டிகேஎஸ்சை காங்கிரஸ் களமிறக்கி உள்ளது. கடந்த 2017 சட்டசபை தேர்தலில் கோவாவில் 40 இடங்களில் 17 இடங்களில் காங்கிரஸ் வென்றது. தனிப்பெரும் கட்சி என்றாலும் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியவில்லை. கட்சியில் இருந்த உறுப்பினர்களுக்கு இடையிலேயே கடும் மோதல் நிலவியது.

பாஜக ஆட்சி
இதையடுத்து அங்கே நிதின் கட்கரி களமிறக்கப்பட்டு எம்எல்ஏக்களை இணைக்கும் வேலையை பார்த்தார். இதையடுத்து எம்ஜிபி, ஜிஎப்பி ஆகிய கட்சிகளை வைத்து அங்கு பாஜக ஆட்சி அமைத்தது. அங்கு பாஜகவிற்கு இருந்த எம்எல்ஏக்கள் 13 பேர் மட்டுமே என்றாலும் மனோகர் பாரிக்கர் ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் நிதின் கட்கரி. அங்கு பாஜகவிற்கு கோவாவில் நிதின் கட்கரி பார்த்த வேலையை தற்போது கோவாவில் காங்கிரசுக்கு டிகே சிவக்குமார் பார்க்க இருக்கிறார்!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications