கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு என்ன தண்டனை?

Subscribe to Oneindia Tamil
யுவராஜ்
BBC
யுவராஜ்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கான தண்டனை விவரங்கள் இன்று பிற்பகல் வெளியாகுமென மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதன்படி தற்போது தண்டனை விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கோகுல்ராஜுக்கு மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் தனித்தனியாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கோகுல்ராஜ் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் 2015ல் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த யுவராஜ் உள்ளிட்ட பத்து பேர் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மார்ச் 5ஆம் தேதி தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

அதன்படி இன்று வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் முன்பாக குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருத்தை நீதிபதி கேட்டபோது, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தாங்கள் நிரபராதி என்றும் தாங்கள் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.

கோகுல்ராஜின் தாயார் சித்ராவின் தரப்பை நீதிபதி கேட்டபோது, என்னுடைய ஒரே மகன் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். தன் மகனுக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் நேரக்கூடாது. ஆகவே குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இரு தரப்பினரின் கருத்தையும் கேட்ட நீதிபதி, குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை பிற்பகலில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இப்போது தண்டனை விவரங்கள் ஒவ்வொருவருக்காக அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

(இந்த பக்கம் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது... முழு தண்டனை விவரத்தையும் அறிய இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+