தங்க வளையல்கள், பிரேஸ்லெட்.. தொழிலதிபர் வீட்டு பீரோவில் வழிந்த நகைகள்.. கேமராவில் தெரிந்த "உருவம்"
போபால்: தங்கம் விலை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. இன்று காலை சவரனுக்கு ரூ.120 உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.720 உயர்ந்துள்ளது. அதனால்தானோ என்னவோ தங்க நகை என்பதே பலருக்கும் எட்டாக்கனியாகி கொண்டிருக்கிறது. தங்க நகைகள் குறித்த குற்ற சம்பவங்களும் பெருகி வருகின்றன.. இதோ மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்து வருகிறது.. அப்படி என்ன நடந்தது?
ஹிராநகர் பகுதியில் வசித்து வருகிறார் திவ்யரத்னா திவாரி.. இவர் மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார்.. ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.. இவரது வீட்டில் இருந்து தினந்தோறும் நகைகள் காணாமல் போய் கொண்டேயிருந்துள்ளன. இதனால் வீட்டில் உள்ளவர்கள் பதறிப்போனார்கள்.. யார் நகைகளை திருடுவது என்று தெரியாமல் நிறையவே குழம்பி போனார்கள்.

ரகசிய கேமராக்கள்
எனவே குற்றவாளியை கண்டுபிடிக்க, தன்னுடைய வீட்டில் ரகசிய கேமராக்களை தொழிலதிபர் பொருத்தினார்.. வழக்கம்போல அன்றைய தினமும் நகைகள் காணாமல் போயின. இதனால், ரகசிய கேமராவை ஆய்வு செய்தபோது, வேலைசெய்யும் பணிப்பெண் மேகா என்பவர்தான், நகைகளையும், பணத்தையும் திருடுவது தெரியவந்தது.
கேமராவில் மேகாவை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலதிபர், உடனடியாக ஹிரா நகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் மேகாவை கைது செய்த போலீசார், விசாரணையை அவரிடம் மேற்கொண்டு வருகிறார்கள்.
அப்பவே டவுட் இருந்தது
தொழிலதிபர் திவ்யரத்னா திவாரி இந்த திருட்டு குறித்து சொல்லும்போது, "என்னுடைய மனைவி அஞ்சலி, என்னுடைய பெற்றோர், சகோதரி என எல்லாருமே ஒரே வீட்டில் வசித்து வருகிறோம்..
கடந்த சில நாட்களாகத்தான், விலைமதிப்பற்ற நகைகள் ஒவ்வொன்றாக மாயமாகின.. தங்க வளையல்கள், 1 நெக்லஸ், 3 பிரேஸ்லெட், 1 தங்கத்தாலி, இவைகளுடன் ஏராளமான பணம் காணாமல் போயின.
வீடியோ பரவியது
ஆரம்பத்திலேயே மேகா மீதுதான் எனக்கு சந்தேகம் இருந்தது. அதனால்தான், ரூம்களில் ரகசிய கேமராக்களைப் பொருத்தினேன். மேகா பணத்தைத் திருடுவது கேமராவில் பதிவாகியிருந்தது.. என்னுடைய மனைவி அஞ்சலியின் ஹேண்ட்பேக்கில் இருந்து பணத்தையும் திருடியிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் வீட்டில் மேகா, நகைகளை திருடுவதும், பணத்தை திருடுவதும் வீடியோவில் பதிவாகியிருந்த நிலையில், அந்த காட்சிகள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications