தம்பி திருமணத்திற்கு ரூ. 3 கோடி மதிப்புள்ள 7 கிலோ தங்கசட்டை அணிந்து வந்த ‘தங்க மகன்’
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஜவுளி வியாபாரி ஒருவர் தனது தம்பியின் திருமணத்திற்கு ரூ. 3 கோடி மதிப்புள்ள 7 கிலோ தங்க சட்டையை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி பங்கஜ் பராக். பள்ளி படிப்பு வரை படித்துள்ள பங்கஜ் இன்று தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற தனது தம்பியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பங்கஜ். அப்போது அவர் 7 கிலோ எடையில் தயாரிக்கப் பட்ட தங்கச் சட்டை அணிந்து வந்திருந்தார். இதன் மதிப்பு ரூ. 3 கோடி எனக் கூறப்படுகிறது.

பங்கஜ் பராக்கின் தங்க சட்டையைக் கண்ட திருமணத்திற்கு வந்திருந்தவர்கள், ஆச்சர்யத்துடன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலர் செல்பியும் எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பங்கஜ், ‘எனக்கு சிறு வயதிலிருந்தே தங்கம் மீது அலாதி பிரியம். எப்போதும் நான் 3 கிலோவுக்கு குறையாமல் தங்க நகைகளை அணிவது வழக்கம்.
தற்போது கூட நான் 3 கிலோ தங்க நகைகளை அணிந்துள்ளேன். எனது மூக்கு கண்ணாடி கூட 30 கிராம் எடையில் செய்யப்பட்டது. எனது 45-வது பிறந்தநாளின் போது, சுமார் ரூ. 1 கோடி செலவில் 3கிலோ எடையுள்ள தங்க சட்டை தைத்து அணிந்திருந்தேன். எனவே, எனது 46வது பிறந்தநாளுக்காக இந்த 7 கிலோ சட்டையை உருவாக்கினேன். ஆனால் ஒரு நாள் முன்னதாக எனது தம்பியின் திருமணம் நடைபெறுவதால் இதற்காக இந்த சட்டையை அணிந்து கொண்டேன்' என்றார்.
"தம்பி".. ஊர் பூராவும் திருட்டுப் பசங்க நிறைய சுத்துறாங்க.. ஜாக்கிரதை ப்ளீஸ்!
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications