டம்மார்னு ஒரு இடி: ரூ.3 கோடி லம்போர்கினி காரை சேதப்படுத்திய ஸ்டார் ஹோட்டல் ஊழியர்
டெல்லி: டெல்லியில் உள்ள ஹோட்டல் லீ மெரிடியனுக்கு வந்த வாடிக்கையாளரின் ரூ.3 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கல்லார்டோ காரை பணியாள் வேறு ஒரு கார் மீது மோதி சேதப்படுத்தியுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த நிபுன் மிக்லானி என்பவர் தனது நண்பரிடம் இருந்து அவரின் லம்போர்கினி கலார்டோ ஸ்பைடர் காரில் லீ மெரிடியன் ஹோட்டலுக்கு சென்றார். ஹோட்டல் வாசலில் அவர் காரை நிறுத்திவிட்டு வெளியே வந்தார்.
காரை பார்க் செய்யும் இடத்தில் அதை நிறுத்தும் பணியாளர் வந்து சாவியை வாங்கினார்.

அருண் குமார்
பணியாளர் அதாவது வாலே அருண் குமார் ரூ.3 கோடி மதிப்புள்ள லம்போர்கினி காரின் சாவியை வாங்கி அதை ஸ்டார்ட் செய்தார்.

கார் பார்க்கிங்
அருண் குமாரை காரை ஓட்டிச் சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செடான் கார் மீது மோதினார். பின்னர் கார் சுவரில் வேகமாக மோதியது.

முன்பக்கம் காலி
கார் சுவரில் வேகமாக மோதியதில் அதன் முன்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. சேத மதிப்பு மட்டும் ரூ. 2 கோடி ஆகும்.

பணம்
காரை மோதிய அருண்குமார் காயம் அடைந்துள்ளார். விபத்துக்கு அருண் குமார் தான் காரணம் என்று ஹோட்டல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் காரை மோதியதால் ஏற்பட்ட சேத மதிப்பை ஹோட்டல் நிர்வாகம் அளித்ததா என்று தெரியவில்லை.

வழக்கு
நிபுன் கார் விபத்து குறித்து லீ மெரிடியன் ஹோட்டல் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

கார்
லம்போர்கினி கலார்டோ மணிக்கு 321 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. அதன் என்ஜின் பவர் 550 பிரேக் ஹார்ஸ்பவர் ஆகும்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications