குட் மார்னிங், பீகார் தேர்தலில் நாங்கள் தான் ஜெயிக்கிறோம்: லாலு
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றி பெறும் என ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் 5 கட்டமாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணி பல்வேறு இடங்களில் முன்னிலையில் உள்ளது.

வாக்குகள் எண்ணத் துவங்கியபோது பாஜக கூட்டணி தான் முன்னிலையில் இருந்தது. ஆனால் அதன் பிறகு ஐக்கிய ஜனதாதள கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இது குறித்து நிதிஷ் குமார் கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில்,
அனைவருக்கும் காலை வணக்கம். நான் நேற்று இரவு நான்றாக தூங்கினேன். பார்த்தால் தெரியவில்லையா? நாங்கள் தான் பீகார் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications