என் இந்தியா.. எவ்வளவு அழகு.. அசர வைக்கும் "இந்தியா இன் ஏ டே"
டெல்லி: குத்துப் பாட்டு கேட்டிருப்போம். கெத்து படம் கூட பார்த்திருப்போம்.. வெத்துப் படத்தையும் கூட பார்த்துத் தொலைத்திருப்போம்.. ஆனால் என்றாவது நம்மை நாமே திரும்பிப் பார்த்திருப்போமா.. ஒரு படமாக.. குழப்பமா இருக்கிறாதா.. தொடர்ந்து படிச்சுப் பாருங்க தெளிவாய்டுவீங்க..!
இந்தியா என்ற ஒரு வார்த்தைக்குப் பின் ஒளிந்திருக்கும் அற்புதங்கள் ஆயிரமாயிரம்.. சொல்லிக் கொண்டே போகலாம்.. அள்ள அள்ள பொங்கி வழியும் பொக்கிஷங்கள் இந்தியாவின் சிறப்பு.
இப்படிப்பட்ட சிறப்பை எத்தனை பேர் பார்த்து ரசித்திருப்போம், சிலாகித்திருப்போம். அதைத்தான் செய்யச் சொன்னது கூகுள்.

சிறப்பு அழைப்பு...
ஆம், குடியரசு தின விழாவையொட்டி ஒரு சிறப்பு அழைப்பை இந்திய மக்களுக்கு கூகுள் விடுத்தது. அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி அன்று ஒரு நாள் நீங்கள் பார்ப்பது, சந்திப்பது என அன்றைய நாளை செல்போன் கேமராவிலோ அல்லது பிற கேமராக்களிலோ வீடியோவாகப் பதிவு செய்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டது கூகுள்.

விதவிதமாய் வீடியோ...
பிறகென்ன இந்தியர்கள் கேமராக்களுடன் கலக்க விட்டனர். தூங்குவது, கொட்டாவி விடுவது, குழந்தைகளின் விளையாட்டு, காலை உதயம், அந்தி மாலை, போக்குவரத்து நெரிசல், கிரிக்கெட் போட்டி என விதம் விதமாக படம் எடுத்துக் குவித்து விட்டனர்.
இந்தியா இன் ஏ டே...
இதை வைத்து 'India in a Day', என்ற பெயரில் படமாக்கியுள்ளது கூகுள். இதன் முதல் லுக் இப்போது வெளியாகியுள்ளது. பார்க்கவே சிலாகிப்பாக உள்ளது.

புரட்சி...
இந்தியாவின் இணையதள வளர்ச்சி ஒரு புரட்சி போல நடந்து வருவதாகவும் கூகுள் கூறியுள்ளது.

பர்ஸ்ட் லுக்...
கூகுள் வெளியிட்டுள்ள இந்த பர்ஸ்ட் லுக் 3 நிமிடம் 54 விநாடிகள் நீள்கிறது. இந்த படத்தை ரிச்சி மேத்தா இயக்கியுள்ளார். ரிட்லி ஸ்காட் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் இதன் செயல் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

ரிலீஸ்...
ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று இந்த படம் வெளியாகிறது
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications