சூழ்ந்து கொண்ட வீரர்கள்.. விண்ணை பிளந்த கோஷம்.. காஷ்மீரில் நடந்த நிகழ்வு.. வியந்த போன ராஜ்நாத் சிங்!
காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் ஒன்றாக சேர்ந்த எழுப்பிய பெரிய கோஷம் இணையம் முழுக்க பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் ஒன்றாக சேர்ந்த எழுப்பிய பெரிய கோஷம் இணையம் முழுக்க பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தற்போது எல்லையில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு வருகிறது. அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
முதலில் அவர் லாடக்கில் நேற்று பார்வையிட்டார். அங்கு சூழ்நிலை எப்படி இருக்கிறது, அமைதி திரும்பிவிட்டதா என்று ஆலோசனைகளை மேற்கொண்டார்.

இன்று காஷ்மீர் சென்றார்
இந்த நிலையில் இன்று அவர் காஷ்மீர் சென்று பார்வையிட்டார். ஜம்மு காஷ்மீரில் எப்படி பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது என்று பார்வையிட்டார். எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் சோதனை செய்தார். அதோடு அங்கிருக்கும் வீரர்களிடம் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார்.

என்ன கோஷம்
இந்த நிலையில் காஷ்மீரில் இன்று சீக்கிய வீரர்கள் முக்கியமான கோஷம் ஒன்றை எழுப்பினார்கள்.ராஜ்நாத் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் " Bole So Nihaal... Sat Sri Akal" என்ற சீக்கிய கோஷத்தை எழுப்பினார்கள். இதன் அர்த்தம் " சந்தோஷத்தில் கோஷமிடுங்கள்.. உண்மை என்றைக்கும் அழியாத ஒன்று" என்பதாகும். சீக்கியர்கள் பயன்படுத்தும் வெற்றி கோஷம் ஆகும் இது.

யார் சொன்னது
சீக்கிய மதத்தின் 10வது குருவான, குரு கோபிந்த் சிங் வெளியிட்ட கோஷம் ஆகும் இது . வெற்றியின் போது அவர்கள் இந்த கோஷத்தை பயன்படுத்துவார்கள். இந்த நிலையில் இன்று ராஜ்நாத் சிங்கிற்கு மரியாதை அளிக்கும் வகையில் இந்திய ராணுவ வீரர்கள் இந்த கோஷத்தை எழுப்பினார்கள். நாடி நரம்பு எல்லாமும் உணர்ச்சி பொங்கும் வகையில் காஷ்மீரின் மலை முகடுகளில் நின்று கொண்டு அவர்கள் இந்த கோஷத்தை எழுப்பினார்கள்.

மீண்டும் கேட்டார்
இந்த கோஷம் மலை முழுக்க மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. இதை கேட்டதும் உடல் புல்லரித்து போன அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் அந்த கோஷத்தை எழுப்பும்படி கூறினார். அவர்களின் வானை பிளக்கும் கோஷத்தை பார்த்து ராஜ்நாத் சிங் வியந்து போனார். தற்போது இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications