கோபிநாத் முண்டே உடல் சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் தகனம்!! சிதைக்கு மகள் தீ மூட்டினார்!!
மும்பை: சாலை விபத்தில் சிக்கி காலமான மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. முண்டேவின் சிதைக்கு அவரது மகள் பங்கஜா தீ மூட்டினார்.
டெல்லியில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே. அவரது உடல் நேற்று டெல்லி பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டது. இன்று காலை மும்பையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் லத்தூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சாலை வழியாக பர்லி கிராமத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. மறைந்த கோபிநாத் முண்டேவிற்கு, பிராத்ன்யா என்ற மனைவியும், பங்கஜா, பிரீதம், யஷஸ்ரீ என்ற பிள்ளைகளும் உள்ளனர்.
அவரது உடல் இன்று பகல் 2 மணி அளவில் அவரது சொந்த ஊரான பர்லியில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவருக்கான இறுதி சடங்குகளை அவரது மகளும் பாஜக எம்.எல்.ஏவும் ஆன பங்கஜா மேற்கொண்டார். அவரே சிதைக்கும் தீ மூட்டினார்.
கோபிநாத் முண்டே இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications