சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது- மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் உயரிய விருது பாரத ரத்னா. கடந்த கால் நூற்றாண்டுகாலமாக இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தார். அவர் இன்றுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார்.

சச்சினை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதேபோல் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ்-க்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுகள்
சச்சின் டெண்டுல்கர் 1994 ஆம் ஆண்டு அர்ஜூனா விருது, 1997-98ல் ராஜிவ் கேல் ரத்னா விருது, 1999ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, 2008ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதுகள் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு அவர் ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications