சீனாவுக்கு இந்தியா பதிலடி: இருநாட்டு எல்லையில் ரூ.5ஆயிரம் கோடியில் உள்கட்டமைப்பு
டெல்லி: இந்திய-சீன எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடியை ஒதுக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய-சீன எல்லையில் அருணாச்சல பிரதேச மாநிலம் அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. எல்லை பகுதியில் சாலை அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பை சீனா மேற்கொண்டுவருகிறது. மேலும், அவ்வப்போது இந்த எல்லையில் சீனா அத்துமீறி வந்தது. இதை தடுக்க தவறியதாக முந்தைய மத்திய அரசு மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் பாஜக தலைமையிலான புதிய அரசு அமைந்தபிறகு சீனாவுடனான எல்லை பிரச்சினைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மோடியின் பூடான் பயணமும் இதை நோக்கிய திட்டம்தான் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் பாஜக அரசின் முதலாவது பட்ஜெட்டில், சீன எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.5ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 28 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு மூலம், ரோடு, குடிநீர், மருத்துவமனை, மின்சார வசதியை எல்லைபகுதியில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
எல்லையில் போதிய வசதியில்லாத காரணத்தால், சீன எல்லையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில்தான் அருணாச்சல பிரதேச மாநில மக்களின் கிராமங்கள் அமைந்துள்ளன. இதனால் சீனா எளிதாக ஊடுருவ முடிகிறது. எல்லைக்கு அருகே அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து மக்களை குடியமர்த்தினால் மக்கள் உதவியுடன் ஊடுருவலை தடுக்க முடிவதுடன், அந்த பகுதி இந்திய எல்லைதான் என்பதற்கான வாதத்திற்கும் வலு சேர்க்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
உள்துறை இணை அமைச்சர் கிரேன் ரிஜிஜு, அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் எல்லை பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துவருவதாகவும் கூறப்படுகிறது. எல்லைப்பகுதியில் நடைபெறும் கட்டமைப்பு பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் விரைந்து அனுமதியளிக்கும் என்று அத்துறைக்கான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் தெரிவித்திருந்தது நினைவு கூறத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications