For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திர கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன் வசம் தெலுங்கானா ஆளுநர் கூடுதல் பொறுப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர பிரதேச மாநில கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மனை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநில கவர்னராக கூடுதலாக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல்நடத்தி முடிக்கப்பட்டு புதிய அரசு அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளது.

Governor of Andhra Pradesh gets additional charge of Governor of Telangana

இந்த நிலையில் தெலுங்கானாவிற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படும்வரை ஆந்திரா கவர்னர் நரசிம்மனை தெலுங்கானா மாநிலத்திற்கு கவர்னராக கூடுதலாக கவனிக்குமாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். இதனை ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

ஆந்திரா மாநில கவர்னராக இருந்த என்.டி.திவாரி, பெண்களுடன் லீலையில் ஈடுபட்டு ராஜினாமா செய்து பிடிபட்டு பதவி விலகியதால் கடந்த 2009ம் ஆண்டு சட்டீஸ்கர் மாநில கவர்னர் நரசிம்மனுக்கு கூடுதலாக பொறுப்பாக வழங்கப்பட்டது.

புதியகவர்னர் நியமிக்கப்படாததைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகாலமாக இ.எஸ்.எல் நரசிம்மன் ஆந்திரா மாநில கவர்னராக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The President of India has been pleased to appoint Shri E.S.L. Narasimhan, Governor of Andhra Pradesh, to discharge the functions of the Governor of Telangana, in addition to his own duties until a permanent arrangement is made. The above appointment will take effect from the date he assumes charge of his office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X