பீகாரில் மதுவிலக்கு இல்லை... நம்மூர் டாஸ்மாக் போல மாநில அரசே மது விற்பனை செய்யும்... நிதிஷ்குமார்
பாட்னா: பீகாரில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் பூரணமதுவிலக்கு அமல்படுத்தப்படமாட்டாது என்றும் உள்நாட்டு மதுபான வகைகளுக்கு மட்டும் முதலில் தடை விதிக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாட்டு மதுபானங்களை தமிழகத்தின் டாஸ்மாக் போல பீகார் அரசின் மதுபான கழக கடைகள் மூலம் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளதாக நிதிஷ்குமார் தெரிவித்தார்.
பீகார் சட்டசபை தேர்தலில் அதிரடி வெற்றி பெற்று முதல்வரான நிதிஷ்குமார், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இருப்பினும் இந்த மதுவிலக்கு எப்படி அமல்படுத்தப்படும் என விவரிக்கப்படவில்லை.

இந்நிலையில் பாட்னாவில் நேற்று மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்காக புதிய கொள்கைக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டமாக உள்நாட்டு மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படும்; இதன் பின்னர் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மதுபானங்கள் நகரங்களில் பீகார் மாநில அரசின் மதுபான கழகங்களின் கடைகள் மூலம் விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரில் மதுபான விற்பனை மூலம் ஆண்டு வருவாய் ரூ4,000 கோடி கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications