கேட்பாரற்று கிடக்கும் பி.எப். பணத்தில் முதியவர்களுக்கான புதிய பென்சன் திட்டம்!
டெல்லி : முதியோருக்கு பென்சன் வழங்க ‘அடல் பென்சன் திட்டம்' உருவாக்கப்படும் என்றும் அதன் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பலன் கிடைக்கும் என்றும் பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ளார். இதில், முதியவர்களுக்கான பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.
அதன்படி, முதியவர்களுக்கு பென்சன் வழங்க முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் புதிய பென்சன் திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ‘அடல் பென்சன் திட்டம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பலன் கிடைக்கும் என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதற்கான பிரீமியத்தில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும் என்றும், இதற்கான நிதி பி.எப் அக்கவுண்ட்களில் கேட்பாரற்று கிடக்கும் நிதியில் இருந்து பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய தகவலின் படி பிபிஎப் கணக்குகளில் ரூ. 3 ஆயிரம் கோடி ரூபாயும், இபிஎப்பில் ரூ. 6 கோடி ரூபாயும் யாரும் உரிமை கோராத நிலையில் கேட்பாரற்று கிடப்பதாக தெரிய வந்துள்ளது. தற்போது அந்தப் பணத்தில் இருந்து தான் முதியவர்களுக்கான பென்சன் திட்டத்திற்கு நிதி பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications