மாலை கூட காயலையே.. முதலிரவில் முக்காடை விலக்கிய மாப்பிள்ளைக்கு காத்திருந்த ட்விஸ்ட்! மலைத்த ம.பி!
போபால்: மத்திய பிரதேசத்தில் திருமணம் முடித்த அன்று இரவே மணமகனுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. காலையில் ஒரு பெண்ணுக்கு தாலி கட்டிய நிலையில் முதலிரவில் வேறு பெண் இருந்திருக்கிறார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, வசதியான மணமகன் வீட்டில் கொள்ளையடிக்க ஒரு மோசடி கும்பலே செயல்பட்டதும், அதற்காக இரு பெண்களை பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. தற்போது அந்த கும்பல் ஒட்டு மொத்தமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருமணம் ஆகாத இளைஞர்களை குறி வைத்து மோசடி செய்யும் கும்பல் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இது போன்ற மோசடிகள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் மத்திய பிரதேசத்தில் அரங்கேறி இருக்கிறது.
ராஜ் கார்க் நகரை சேர்ந்த ஐ டி ஊழியரான கமல் தான் இந்த மோசடியில் சிக்கி இருக்கிறார். ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் இருக்கும் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருக்கிறார்கள்.

பல இடங்களில் பெண் தேடி வந்த நிலையில் திருமண புரோக்கர் ஒருவர் பெரிய இடத்துப் பெண் என ஒரு இளம் பெண்ணின் புகைப்படத்தை காட்டி இருக்கிறார். கமலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அந்த பெண் பிடித்த நிலையில் திருமண ஏற்பாடுகள் வேகம் எடுத்தன. தொடர்ந்து பிரம்மாண்டமாக திருமணமும் நடந்தது. தொடர்ந்து கமலின் வீட்டுக்கு அந்த புது பெண்ணை அழைத்து சென்றிருக்கின்றனர். முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் அந்த பெண்ணின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது.
இதனால் ஏதோ ஒரு தவறு நடக்கிறது என உணர்ந்த கமல் முதல் இரவு அறையில் அந்த பெண்ணின் முகத்தை பார்த்தபோது ஷாக் ஆகிவிட்டார். காரணம் அவர் தாலி கட்டியது ஒரு பெண் முதலிரவு அறையில் அலங்காரத்துடன் இருந்தது மற்றொரு பெண். கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிடலாம் என்று இருந்த அந்த பெண்ணை குடும்பத்தினர் பிடித்து அறைக்குள் அடைத்து வைத்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது இளம் பெண் ஒருவரின் முகத்தை காட்டி திருமணம் செய்து வைத்து நிலையில் மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு வருவதற்குள் வேறு ஒரு பெண்ணை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர் புது பெண் போல் நடித்தும் இருக்கிறார். மணமகனின் குடும்பத்தினர் அசந்து தூங்கும் நேரத்தில் வீட்டில் உள்ள நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் செல்ல அந்த பெண் திட்டம் தீட்டி இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் இருந்திருக்கிறது.
திருமண புரோக்கர் கமலின் குடும்பத்தை நன்கு அறிந்தவர் என்பதால் இளம் பெண்ணின் புகைப்படத்தை காட்டி திருமணம் செய்து வைத்து, திருடுவதற்கு மற்றொரு பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர். மணமகன் உள்ளிட்டவரை மயக்கமடைய வைக்க குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுக்க தயாராக இருந்திருக்கின்றனர். அவருக்கு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து மகளை திருமணம் செய்து கொடுக்க வைத்திருக்கின்றனர். தற்போது ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பெண் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
-
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
Kushbu: மகள் அவந்திகாவுக்கு திருமணம்! பிரதமருக்கு அழைப்பு விடுத்த குஷ்பு- சுந்தர்.சி! மாப்பிள்ளை யார்? -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
குஷ்பு மாப்பிள்ளை இவரா? அந்த போட்டோவை எடுத்து போட்டு அலப்பறை! ஜெ.தீபா கணவர் மாதவன் வரை போய்ட்டாங்களே -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications