ஆக. 27 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி டி6 ராக்கெட்... இஸ்ரோ அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு : ஜி.எஸ்.எல்.வி டி6 ராக்கெட் மூலம் ஜிசாட்6 செயற்கைகோள் வரும் 27 ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கை கோளான ஜிசாட்-6 ஐ சுமந்து ஜி.எஸ்.எல்.வி. டி.6 ராக்கெட் வரும் 27ந்தேதி மாலை 4.52 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

gslv

இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார். ஜிசாட்-6 செயற்கைக் கோளில் மிக பிரம்மாண்டமான ஆண்டனா பொருத்தப்பட்டுள்ளதால், மிகச் சிறிய தொலைபேசியைக் கொண்டு நேரடியாக செயற்கைக்கோள் மூலம் மற்றொரு இடத்திற்கு தொடர்புகொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

இந்த செயற்கைக்கோள் பிரத்யேகமாக பாதுகாப்புத்துறைக்கு பேருதவி புரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரம்சாராபாய் விண்வெ ஆராய்ச்சி மைய இயக்குநர் சிவன், 2500 கிலோ எடைகொண்ட இந்த ராக்கெட் 250 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஜி.எஸ்.எல்.வி டி6 ராக்கெடை ஏவுவதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+