சரக்கு சேவை வரி மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு மழைக்கால கூட்டத் தொடர்!
டெல்லி: சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தின் மழைக்கால சிறப்பு தொடர் கூட்டப்படும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நெருக்கடியான இந்த நேரத்தில் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தியாக வேண்டும். அதற்கு சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்ட திருத்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படவில்லை. தேதி குறிப்பிடாமல் மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 2வது பகுதியை கூட்டுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படும் என்று நம்புகிறேன். இது தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளின் காங்கிரஸ் தலைவர்களுடனும் மற்ற கட்சிகளுடனும், பேசி வருகிறோம்.
நாட்டின் நலன் கருதி மாற்றுமுறை ஆவணச் சட்டம், ரியல் எஸ்டேட் மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா உள்ளிட்ட முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்கவேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்ட மசோதா நிறைவேறினால் புதிய வரி விதிப்பு முறையால் நாட்டின் வளர்ச்சி விகிதம் 1.5 முதல் 2 சதவீதம் வரை அதிகரிக்கும். இல்லையென்றால், நாட்டின் பொருளாதாரத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications