திட்டமிட்டப்படி ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமல்.. மத்திய அரசு திட்டவட்டம்
திட்டமிட்டப்படி ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்குக் கொண்டுவரப்படுகிறது.
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை வரும் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டுவரப்பட உள்ளது.
நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வரப்படுகிறது. சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஏற்ப 5, 12, 18, 28 என நான்கு விதமான வரிகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 1ம் தேதி முதல் இந்த வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

இதனிடையே மத்திய அரசிடம் போதிய தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லை எனவும், இதனால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அமல்படுத்துவது தள்ளிப் போகும் எனவும் தகவல்கள் வெளியின.
இதை மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா நேற்று திட்டவட்டமாக மறுத்தார். அவர் இதுபற்றி கூறுகையில், 'இதில் துளியும் உண்மை இல்லை. இது முழுக்க முழுக்க வதந்தி ஆகும்' என்றார்.
மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், 'ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மென்மையான முறையில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. எனவே, திட்டமிட்டபடி ஒருங்கிணைந்த சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலுக்கு வரும். இதில் எந்த மாறுதலும் இல்லை' என்று கூறினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications