ஜிஎஸ்டி அறிமுக விழா.. வெற்று விளம்பரம்.. காங்கிரஸ், திமுக, திரிணாமுல், லாலு புறக்கணிப்பு
இன்று இரவு நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி அறிமுக விழாவை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் புறக்கணிக்கின்றன.
டெல்லி: இன்று நள்ளிரவு நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழா நடக்கிறது. இந்த விழாவை எதிர்க்கட்சியான காங்கிரஸ் புறக்கணித்துள்ளது. அதே போன்று அதன் கூட்டணியில் உள்ள திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி ஆகிய கட்சிகளும் புறக்கணித்துள்ளன.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி இன்று நள்ளிரவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
நீண்ட கால இழுபறிக்கு பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் இந்திய அளவில் எழுந்துள்ளன.

அறிமுக விழா
இன்று நள்ளிரவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழா நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மோடி பங்கேற்க உள்ளனர். மேலும், லோக்சபா தலைவர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

காங்கிரஸ் புறக்கணிப்பு
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழாவில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது என்று அறிவித்தது.

திமுக புறக்கணிப்பு
இதனைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள திமுகவும் அறிவித்தது. இதுகுறித்து திமுக ராஜ்ய சபா எம்பி டிகேஎஸ் இளங்கோவன், இது ஒரு வெற்று விளம்பர விழா என்று கருத்து தெரிவித்தார்.

லாலு புறக்கணிப்பு
இதே போன்று, பிகார் மாநிலத்தில் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் இந்த விழாவை புறக்கணித்துள்ளது. ஆர்ஜேடியின் தலைவரான லாலு இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

திரிணாமுல் புறக்கணிப்பு
ஜிஎஸ்டி விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று முதன் முதலில் அறிவித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. ஜிஎஸ்டி அறிமுகம் மத்திய அரசின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகும் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications