பயமா குமாரு? குஜராத்தில் பாஜக மாஜி முதல்வர், மாஜி துணை முதல்வர் ஜூட்- தேர்தலில் போட்டியிட மறுப்பு!
அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் தாங்கள் போட்டியிடப் போவது இல்லை என பாஜகவின் முன்னாள் முதல்வர் விஜய ரூபானி, முன்னாள் துணை முதல்வர் நிதின் பட்டேல் ஆகியோர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5-ந் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்தில் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

அதிகாரத்தை தக்க வைக்கும் பாஜக
குஜராத் மாநிலத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. பாஜகவுக்கு எதிராக ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய வலிமையுடன் காங்கிரஸ் கட்சி இல்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பாஜகவுக்கு தாவிவிட்டனர். திரிபுராவில் ஒட்டுமொத்த காங்கிரஸை வளைத்துப் போட்டு அதிகாரத்தை பாஜக பிடித்தது. அதேபாணியில் குஜராத்தில் பெரும்பான்மை காங்கிராசாரை வளைத்துப் போட்டு அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது பாஜக.

மும்முனைப் போட்டி
குஜராத் தேர்தலில் இம்முறை பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆனால் குஜராத் தேர்தல் தொடர்பான அனைத்து கருத்து கணிப்புகளுமே, பாஜக அமோக வெற்றியை அறுவடை செய்யப் போகிறது என தெரிவித்துள்ளன. ஆம் ஆத்மி கட்சிக்கு சொல்லும்படியான வெற்றி கிடைக்காது போனாலும் காங்கிரஸுக்கு போகும் வாக்குகளை கபளீகரம் செய்து பாஜகவின் வெற்றிக்கு பேருதவியாக இருக்கும் எனவும் கருத்து கணிப்புகள் சொல்கின்றன.

ஜூட் விட்ட விஜய் ரூபானி
இந்த நிலையில் குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக ஓரிரு நாட்களில் அறிவிக்க உள்ளது. 182 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது குஜராத் முன்னாள் முதல்வர் விஜய ரூபானி மற்றும் முன்னாள் துணை முதல்வர் நிதின் பட்டேல் இருவரும் கட்சித் தலைமைக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் தாங்கள் இருவரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை குஜராத் பாஜக அரசின் முதல்வராக இருந்தவர் விஜய ரூபானி. தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ.வும் கூட.

தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை?
பாஜக மேலிடத்துக்கு விஜய ரூபானி அனுப்பிய கடிதத்தில், 5 ஆண்டுகாலம் மாநில முதல்வராக அனைவரது ஒத்துழைப்புடனும் பணியாற்றி இருக்கிறேன். கட்சியின் புதிய தொண்டர்களுக்கு இந்த தேர்தலில் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். ஆகையால் நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இத்தகவலை மேலிடத்துக்கு தெரிவித்திருக்கிறேன். வெல்லக் கூடிய வேட்பாளர்களை அனைவரும் தேர்வு செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார் விஜய ரூபானி. இதேபோல நிதின் பட்டேல், பாஜக மூத்த எம்.எல்.ஏ. பூபேந்திரசின் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளனர். இது பாஜகவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications