For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத் தேர்தல்: அகமதாபாத்தில் வரிசையில் நின்று வாக்களித்த பிரதமர் மோடி- live

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    அகமதாபாத்தில் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி- வீடியோ

    காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. வாக்குப் பதிவை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    -மணிநகரில் ராமன்நகர் சொசைட்டியை சேர்ந்த 106 வயது முதியவர் மணிபாய் படேல் வாக்களித்தார்

    -பகல் 12 மணிவரை 39% வாக்குப் பதிவு

    -அகமதாபாத் ராணிப் வாக்குச் சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்

    -வாக்களிக்க வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு

    -பிரதமர் மோடி வரிசையில் நின்று வாக்களிக்கிறார்

    -அகமதாபாத்தின் ராணிப் வாக்குச் சாவடியில் பிரதமர் மோடி வாக்களிக்க வருகை

    -3 மணிநேரத்தில் 20% வாக்குகள் பதிவாகி உள்ளன.

    -முதல் 2 மணிநேரத்தில் 9.6% வாக்குப்பதிவு

    -விரம்காமில் ஹர்திக் பட்டேல் வாக்களித்தார்

    -அகமதாபாத்தில் வரிசையில் நின்று நிதி அமைச்சர் அருண்ஜேட்லி வாக்களித்தார்

    -நாரண்புராவில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வாக்களித்தார்

    -வதோதராவில் 3 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுது

    -இன்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதால் சர்ச்சை

    -இன்று வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகளில் 2012 தேர்தலில் பாஜக- 52; காங். 39 இடங்களில் வென்றது.


    -ஹர்திக் பட்டேலின் பெற்றோர் பாரத் பட்டேல், உஷா பட்டேல் வீரம்காம் வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்

    - காந்திநகர் வாக்குச் சாவடியில் மோடியின் தாயார் ஹீராபென் வாக்களித்தார்

    - மோடியின் தாயார் ஹீராபென் வாக்களிக்க வருகை தந்தார்

    - முன்னாள் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் அகமதாபாத்தில் வாக்களித்தார்.

    - 2-வது கட்டமாக 93 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது

    - இன்று வாக்குப் பதிவு நடைபெறுவதில் பரப்பளவின் அடிப்படையில் மிகச் சிறிய தொகுதி தாரியாபூர் 6 ச.கி.மீ

    - பரப்பளவின் அடிப்படையில் மிகப் பெரிய தொகுதி ரத்னாபூர் 2,544 ச.கி.மீ

    - இன்று வாக்குப் பதிவு நடைபெறுவதில் வாக்காளர்கள் எண்ணிக்கையில் பெரிய சிறிய தொகுதி லிம்கேடா; 1,87,245 வாக்காளர்கள்

    - வாக்காளர்களின் அடிப்படையில் பெரிய தொகுதி கட்லோதியா- 3,52,316 வாக்காளர்கள்.

    - 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு

    - இன்றைய தேர்தல் களத்தில் 851 வேட்பாளர்கள் உள்ளனர்.

    - துணை முதல்வர் நிதின் பட்டேல், அமைச்சர் பூபேந்திர சுதஷ்மா, காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி, அல்பேஎஷ் தாகுர் முக்கியமானவர்கள்

    - பாஜக 93, காங். 81, பகுஜன் சமாஜ் 75, ஆம் ஆத்மி 8, ஐக்கிய ஜனதா தளம் 14, தேசியவாத காங்கிரஸ் 28, சிவசேனா 17 வேட்பாளர்கள் போட்டி

    - மொத்தம் 2,22,96,867 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    - 1,07,48,977 பேர் பெண் வாக்காளர்கள்

    - 455 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

    - 24,575 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு

    - பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, அத்வானி, அமித்ஷா வாக்களிக்கின்றனர்

    -பாஜக மூத்த தலைவர் அத்வானி, நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, தேசிய தலைவர் அமித்ஷாவும் இன்று வாக்களிக்கின்றனர்

    -டிசம்பர் 9 மற்றும் இன்று பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 18-ல் எண்ணப்படுகின்றன.

    -குஜராத் சட்டசபை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு தொடங்குகிறது

    -2-வது கட்டமாக 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது

    English summary
    Voting for the Second phase of the Gujarat Assembly Elections will begin today on 93 seats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X