Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உச்சக்கட்ட டென்ஷன்.. குஜராத் பேரவைக்கு நாளை முதல்கட்ட தேர்தல்.. 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு.. பரபர

குஜராத்தில் நாளை 89 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் நடக்க உள்ளது

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி 89 தொகுதிகளிலும் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது.. வரும் 1ம் தேதி அதாவது நாளைய தினம், முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பு அங்கு ஏற்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது குஜராத் சட்டசபை தேர்தல்.. கடந்த 6 மாதத்துக்கு முன்பேயே இங்கு களம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

அத்துடன் பிரச்சாரமும் சேர்ந்து கொண்டதால், தேசிய அரசியலில் அனலடிக்க ஆரம்பித்துவிட்டது குஜராத் தேர்தல்..

 டஃப் போட்டி

டஃப் போட்டி

182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1-ந் தேதி, 5-ந் தேதி என்று 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது... முதல் கட்டமாக 89 தொகுதிகளில் 1-ந் தேதி (நாளை) தேர்தல் நடக்க உள்ளது.. வழக்கமாக குஜராத்தில் தேர்தல் என்றாலே, பாஜகவுக்கும், காங்கிரசுக்கும்தான் போட்டி இருக்கும்.. ஆனால், இந்த முறை, ஆம் ஆத்மியும் களமிறங்கிவிட்டது.. குஜராத் என்றில்லை, கடந்த 2 வருட காலமாகவே ஆம் ஆத்மி, ஒவ்வொரு மாநிலத்திலும் அதிரடியை காட்டிக் கொண்டிருக்கிறது.

மும்முனை

மும்முனை

குஜராத்தில் 181 வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.. ஆட்சியை பிடிப்போம் என்றும் சொல்லி கொண்டிருப்பதால், மும்முனைப்போட்டி குஜராத்தில் எழுந்துள்ளது.. மொத்தம், 1,621 வேட்பாளர்களில் 139 பேர் பெண்கள் ஆவர்.. அவர்களில் 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியிலும், குஜராத் கலவர வழக்கு குற்றவாளி மனோஜ் குக்ரானியின் மகள் பயல் குக்ரானி நரோடா தொகுதியிலும் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 ரிசல்ட்ஸ்

ரிசல்ட்ஸ்

4 பழங்குடியினர் தொகுதிகளில் காங்கிரஸ் பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆம் ஆத்மியும் 3 பழங்குடியினர் தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை போட்டியிடச் செய்துள்ளது... ஆரம்ப கட்ட பிரச்சார முதல் இறுதிக்கட்ட பிரச்சாரம் வரை, பாஜக மேலிட தலைவர்கள், வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டனர்.. பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.. அதேபோல, காங்கிரஸ் தலைவர் கார்கே, மற்றும் ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள், குஜராத்தில் முற்றுகையிட்டு வாக்கு சேகரிப்பில் மும்முரமாகினர்..

 ஜரூர் குஜராத்

ஜரூர் குஜராத்

இந்நிலையில், 89 தொகுதிகளில் நாளைய தினம் முதல் கட்ட தேர்தல் நடக்க போகிறது.. அந்த தொகுதிகளில் நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், களமிறங்கும் 788 வேட்பாளர்களின் ரிசல்ட் என்னவாக இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. குஜராத் தேர்தல் கமிஷனர் பாரதி இதை பற்றி சொல்லும்போது, டிசம்பர் 1-ம் தேதி, 19 மாவட்டங்களில் உள்ள 89 சட்டசபை தொகுதிகளுக்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 760 பேர் ஓட்டளிக்கின்றனர். தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+