குஜராத் பாஜக முதல்வர் வேட்பாளர் விஜய் ரூபாணி அபார வெற்றி
குஜராத் பாஜக முதல்வர் வேட்பாளர் விஜய் ரூபாணி ராஜ்கோட் மேற்கு தொகுதியில் அபாரமாக வெற்றி அடைந்து இருக்கிறார்.
Recommended Video

ராஜ்கோட்: குஜராத் பாஜக முதல்வர் வேட்பாளர் விஜய் ரூபாணி ராஜ்கோட் மேற்கு தொகுதியில் அபாரமாக வெற்றி அடைந்து இருக்கிறார். மொத்தமாக இவர் 68,818 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்து உள்ளார்.
குஜராத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி போட்டியிடும் ராஜ்கோட் மேற்கு தொகுதி அதிக கவனம் பெற்று இருக்கிறது.

2014ல் நடந்த ராஜ்கோட் மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் விஜய் ரூபாணி வெற்றிபெற்றார். தற்போது அதே தொகுதியில் அவர் போட்டியிட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் அவர் முன்னிலை வகித்தார். பின் வாக்கு எண்ணிக்கையில் அவர் பின்னடைவு அடைந்தார். அதன்பின் மீண்டும் அவர் முன்னிலை வகித்தார். இந்த தொகுதியில் காங்கிரஸுக்கும், பாஜகவிற்கு இடையில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாமல் சென்று கொண்டு இருந்தது.
பாஜகவை சேர்ந்த விஜய் ரூபாணியை எதிர்த்து காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஷிவா சேனா ஆகிய கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 'இந்திரானில் ராஜ்குரு' விஜய் ரூபாணிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். இவர்தான் குஜராத் தேர்தலில் மிகவும் பணக்கார வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று விஜய் ரூபானி வென்று இருக்கிறார். விஜய் ரூபானி 68,818 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் இந்திரானில் ராஜ்குரு 37,744 வாக்குகள் பெற்றார். இதையடுத்து விஜய் ரூபானி 26,074 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications