தமிழக பாஜகவுக்கு "மெர்சல்" பிடிக்காம போகலாம்.. ஆனால் குஜராத் வரவேற்குதே.. "பீஸ் ப்ரோ"!!
Recommended Video

அகமதாபாத்: தமிழகத்தில் உள்ள சில பாஜக தலைவர்கள் மெர்சல் படத்தை எதிர்த்து விழுந்து விழுந்து குரல் கொடுத்தனர். ஆனால் குஜராத்திலோ, மெர்சல் "மேஜிக்"குக்கு நல்ல வரவேற்பு உள்ளது.. அதாவது, மேஜிக் கலைஞர்களை வைத்து பிரசாரம் செய்து வருகிறது பாஜக.
மெர்சல் படத்தில் மேஜிக் விஜய் ரசிகர்களைக் கவர்ந்தார். அதேபோல மேஜிக் கலைஞர்களை வைத்து தனது திட்டங்களை பிரசாரம் செய்யவுள்ளது குஜராத் பாஜக. குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளிலும் இந்த மேஜிக் கலைஞர்கள் ஜீபூம்பா போட்டு கலக்கப் போகிறார்கள்.
மேஜிக் செய்வதோடு மட்டுமல்லாமல் பாஜகவின் திட்டங்கள் குறித்தும் அவர்கள் வித்தியாசமாக மேஜிக் கலை மூலம் விளக்குவது மக்களைக் கவரும் என பாஜக நம்புகிறதாம்.

மேஜிக் பிரசாரம்
மோடி இன்னும் குஜராத்தில் பிரசாரத்தைத் தொடங்காமல் உள்ளார். அதேசமயம், அவர் வருவதற்குள் பாஜக பிரசாரத்தை களை கட்ட வைக்க மாநில பாஜக படு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதிதான் இந்த மேஜிக் பிரசாரம்.

வாடகைக்கு பிடிக்கப்பட்ட மேஜிக் கலைஞர்கள்
இன்று முதல் இந்த மேஜிக் பிரசாரம் களை கட்ட ஆரம்பித்துள்ளது. 182 தொகுதிகளிலும் இவர்கள் போய் மேஜிக் ஷோ நடத்தி அதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவார்கள். இதற்காக தொழில்முறை மேஜிக் கலைஞர்களை வாடகைக்குப் பிடித்துள்ளனராம்.

மக்கள் மனதைக் கவர்வார்கள்
ஏற்கனவே தெரு நாடகம், பாரம்பரிய நடனம், 3டி பிரசாரம் என பாஜகவினர் டிசைன் டிசைனாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது மேஜிக் ஷோக்களைச் சேர்த்துள்ளனர். பாஜகவின் முழக்கங்களை இந்த மேஜிக் கலைஞர்கள் எளிதாக மக்கள் மனதில் பதிய வைப்பார்கள் என கட்சிக்காரர்கள் நம்புகிறார்கள்.

காங்கிரஸின் கிண்டல்
ஆனால் இதையும் காங்கிரஸ் தனக்கு சாதகமாக்க முயல்கிறது. இதுகுறித்து குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பரத்சிங் சோலங்கி கூறுகையில், பாஜக ஒரு மாயக்காரர்கள் நிறைந்த கட்சி. அதைத்தான் இந்த மேஜிக் பிரசாரம் மீண்டும் நிரூபிக்கிறது.. ராகுல் காந்தியை திட்டுவதைத் தவிர இவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது என்று நக்கலடித்துள்ளார்.
-
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications