120 கிமீ வேகம், அலறிய நண்பர்.! அடுத்த நொடி இரண்டாக பிளந்து விபத்தில் சிக்கிய கார்! பறிபோன 2 உயிர்கள்
காந்திநகர்: அதிவேகமாக கார் இயக்குவதால் ஏற்படும் ஆபத்துகளை உணராமல்.. அதை வீடியோவாக பதிவிடும் போக்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் அதிவேகமாக காரை ஓட்டிய நிலையில், அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் காரை ஓட்டிய இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
அதிவேகம் ஆபத்தானது என்பதை உணராமல் இந்த காலத்தில் இளைஞர்கள் கார், பைக்குகளை அச்சுறுத்தும் வேகத்தில் இயக்குகிறார்கள். இதுபோன்ற பொறுப்பற்ற செயலால் கொஞ்சம் கண்ட்ரோல் மிஸ்ஸானாலும் கூட மிக மோசமான விளைவுகள் ஏற்படும். இதனால் அவர்களுக்கு மட்டுமில்லை.. சாலையில் அனைத்து ரூல்ஸையும் பின்பற்றி வருபவர்களுக்கும் கூட ஆபத்தாகவே முடிகிறது.

விபத்து
அப்படியொரு மோசமான விபத்து தான் நேற்றைய தினம் குஜராத்தின் ஜெட்பூரில் நடந்துள்ளது. அதிவேகமாக இயக்கப்பட்ட கார் விபத்தில் சிக்கிய சூழலில், உள்ளே இருந்த இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவத்தில் காரை ஓட்டிய அவத் திவாரி, விபத்துக்குச் சற்றுமுன் இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக கார் ஓட்டும் வீடியோக்களைப் பகிர்ந்திருந்தார்.
சுமார் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த ஹூண்டாய் வெர்னா கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஓட்டுநர் அவத் திவாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது 20 வயது நண்பரான தேவ்ராஜ் கோசாய் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
என்ன நடந்தது
திவாரி அதற்கு முன்பும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வண்டி ஓட்டும் வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார். அவர் ஒரு கையால் ஸ்டீயரிங் பிடித்து மறு கையால் மொபைலில் ரீல் எடுத்தது வீடியோ வெளியிட்டுள்ளார். இன்னொரு வீடியோவில் பக்கத்தில் இருந்த ஒருவர் அதிவேகமாக கார் செல்வதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
உயிரிழப்பு
இந்தச் சம்பவத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த நிலையில், அக்ஷய் பிரவீன்பாய் வகேலா என்ற மற்றொரு பயணி படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், திவாரி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பர்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒருவர் தான் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இப்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவத் திவாரிக்கு இன்ஸ்டாகிராமில் 3,500க்கும் அதிகமான பலோயஸ்ர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் லைக், ஷேர் வாங்க அவர் இதுபோல அதிவேகமாக வாகனங்களை இயக்கி அதை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications