ஹோட்டல் ரூமில் இளம்பெண்ணுடன்! திடீரென உள்ளே வந்த மனைவி.. வசமாக சிக்கிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்!
காந்தி நகர்: குஜராத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போது அங்கு நடந்துள்ள சம்பவம் காங்கிரசுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அங்குள்ள அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ள நிலையில், இதுவரை அங்கு நடக்கும் காட்சிகள் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமானதாக இல்லை.
சமீபத்தில் தான் காங்கிரஸ் இளம் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட ஹர்திக் பட்டேல் பாஜகவில் ஐக்கியமானார். இந்நிலையில், தற்போது அங்கு நடந்துள்ள சம்பவமும் காங்கிரசுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

பரத்சிங் சோலங்கி
முன்னாள் மத்திய அமைச்சரும், இரண்டு முறை குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தவர் பரத்சிங் சோலங்கி. குஜராத் காங்கிரஸில் முக்கிய தலைவர்களில் ஒருவராக அறியப்படும் இவர், வேறு ஒரு பெண்ணுடன் தனிமையில் ஹோட்டல் ரூமில் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வைரல் வீடியோ
பரத்சிங் சோலங்கி வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை கையும் களவுமாகப் பிடித்த அவரது மனைவி ரேஷ்மா படேல், ஹோட்டல் அறைக்குள் புகுந்து அவரை அம்பலப்படுத்தினார். இந்த சம்பவத்தின் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இணையத்தில் வைரலாக பரவும் அந்த வீடியோவில் பரத்சிங் சோலங்கியின் மனைவி ரேஷ்மா படேல் சிலருடன் ஹோட்டல் அறை ஒன்றில் நுழைகிறார்.

பரபர சம்பவம்
அறையின் உள்ளே பரத்சிங் சோலங்கி இளம் பெண் ஒருவருடன் இருப்பது தெளிவாகப் பதிவாகி உள்ளது. இதனால் ஆத்திரமடையும் ரேஷ்மா படேல், அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கத் தொடங்குகிறார். இதை பாரத்சிங் சோலங்கி தடுக்க முயல்வதும் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இருப்பினும் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தாக்கும் ரேஷ்மா படேல், 'நீ என் கணவருடன் இருக்கிறாய்... நான் உன்னை விடமாட்டேன்...' என்று கூறிக் கொண்டே ஆவேசமாகத் தாக்குகிறார்.

தர்மசங்கடம்
மேலும், அப்பெண்ணின் முகத்தையும் வீடியோவில் காட்ட முயல்கிறார். இருப்பினும், அந்த இளம் பெண் தனது கைகளைக் கொண்டு தொடர்ந்து முகத்தை மறைத்துக் கொள்வதும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. இன்னும் சில மாதங்களில் குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில காங்கிரசுக்கு இந்த வீடியோ தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சி எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை.

நீண்ட காலமாகப் பிரச்சினை
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இந்த பரத்சிங் சோலங்கிக்கும் அவரது மனைவி ரேஷ்மா படேலுக்கும் இடையே நீண்ட நாட்களாகக் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. தன்னை சித்திரவதை செய்து வீட்டை விட்டு வெளியேற்றியதாக ரேஷ்மா படேல் பரத்சிங் சோலங்கியை சாடியிருந்தார். மேலும், பரத்சிங் சோலங்கி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தனது அரசியல் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி விவாகரத்து செய்ய வற்புறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications