குஜராத்தில் பாஜகவிற்கு மாபெரும் வெற்றி.. காங்கிரசுக்கு படுதோல்வி.. ரிபப்ளிக் டிவி பரபர கணிப்பு!
காந்தி நகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக பாஜக 128 -148 இடங்களை பெற்று வெற்றிபெறும் என்று ரிபப்ளிக் டிவி PMARQ கணிப்பு வெளியிட்டு உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் குஜராத் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. குஜராத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
குஜராத்தில் கடந்த 27 வருடமாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. குஜராத் பாஜகவின் கோட்டையாக உள்ளது. 1995ல் இருந்து அங்கு பாஜக ஆட்சிதான் உள்ளது.

பாஜக ஆட்சி
பாஜகவிற்கு தேசிய அளவில் ஆணி வேராக குஜராத் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கடுமையான மும்முனை போட்டி நிலவியது. 182 தொகுதிகளில் இரண்டு கட்டமாக அங்கு தேர்தல் நடைபெற்றது. அங்கு முதல் கட்ட தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவானது. அங்கு மெஜாரிட்டி பெற 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

இரண்டாம் கட்ட தேர்தல்
இரண்டாம் கட்ட தேர்தல் இன்று 14 மாவட்டங்களில் உள்ள 93 இடங்களில் நடைபெற்றது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்றது. 5 மணி வரை 58 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. மொத்தமாக இறுதிவாக்கு பதிவு இரண்டாம் கட்ட தேர்தலில் 61% ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. மொத்த வாக்குப்பதிவு 60% என்ற அளவில் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

கணிப்பு
இந்த நிலையில்தான் குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி உள்ளன. குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக பாஜக 128 -148 இடங்களை பெற்று வெற்றிபெறும் என்று ரிபப்ளிக் டிவி PMARQ கணிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி பாஜக மாபெரும் வெற்றியை பெறும். பாஜக 2017 தேர்தலில் 99 இடங்களை மட்டுமே வென்ற நிலையில் இந்த முறை 128 -148 இடங்களை பெற்று வெற்றிபெறும் என்று ரிபப்ளிக் டிவி கணிப்பு வெளியிட்டு உள்ளது. அங்கு மெஜாரிட்டி பெற 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.இதன் மூலம் குஜராத்தில் வரலாறு காணாத வெற்றியை பாஜக பெறும் என்று கணிப்பு தெரிவித்துள்ளது. இதுவரை 6 தேர்தல்களில் அங்கு பாஜக வெற்றிபெற்றுள்ளது. இந்த முறை 7வது தடவையாக அங்கு பாஜக வெற்றிபெறுகிறது. 1995ல் ஹரிச்சந்திரா பட்டேல் தலைமையில் பாஜக வென்றதில் இருந்தே அங்கு பாஜகதான் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது.

காங்கிரஸ்
குஜராத் எக்சிட் போலின்படி காங்கிரஸ் 30 - 42 இடங்களை பெறும் என்று ரிபப்ளிக் டிவி கணிப்பு வெளியிட்டு உள்ளது. அதாவது கடந்த தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களை வென்றது. அதில் இருந்து 30க்கும் மேற்பட்ட இடங்களை காங்கிரஸ் இழக்கும். அதாவது காங்கிரசுக்கு இது படுதோல்வி என்று கணிப்பு தெரிவிக்கிறது. மேலும்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி 2 - 10 இடங்களை பெறும் என்று இந்த ரிபப்ளிக் டிவி கணிப்பு தெரிவிக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications