For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் ஆட்சியை தக்க வைக்குமா பாஜக? இழந்ததை மீண்டும் பெறுமா காங்கிரஸ்? எகிற வைக்கும் ரிசல்ட்

குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

By Madhivanan
Google Oneindia Tamil News

Recommended Video

    குஜராத் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது | Oneindia Tamil

    அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி உள்ளது. இதையொட்டி இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    குஜராத்தில் 22 ஆண்டுகாலம் பாஜக ஆட்சியில் தொடர்ந்து இருந்து வருகிறது. குஜராத் மாநிலத்தின் மொத்தம் 182 தொகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 9,14 என இரு கட்டமாக நடைபெற்றது. முதல் கட்டமாக 89, 2-வது கட்டமாக 93 தொகுதிகளில் நடைபெற்றது.

    gujarat

    முதல் கட்டமாக டிசம்பர் 9-ந் தேதியன்று குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்சி மற்றும் தெற்கு குஜராத்தில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 66.75% வாக்குகள் பதிவாகி இருந்தன,

    2-வது கட்டமாக வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 68.41% வாக்குகள் பதிவாகின.

    குஜராத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4.35 கோடி. இவர்களில் 2.97 கோடி இரு கட்ட தேர்தல்களிலும் வாக்களித்தனர். நர்மதா மாவட்டத்தில் அதிகபட்சமாக 79.15%; துவாரகாவில் குறைந்தபட்சமாக 59.39% வாக்குகள் பதிவாகி இருந்தன.

    முதல் கட்ட தேர்தலில் 57 பெண்கள் உட்பட 977 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 443 சுயேச்சைகளும் களம் கண்டனர்,

    வடக்கு சூரத் தொகுதியில் 1,57,250 வாக்காளர்கள்தான் இருந்தனர். அதேநேரத்தில் கம்ரேஜ் தொகுதியில் அதிகபட்சமாக 4,28.695 வாக்காளர்கள் இருந்தனர்.

    2-ம் கட்ட தேர்தலில் 69 பெண்கள் உட்பட 851 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மகேஷனாவில் அதிகபட்சமாக 34 பேரும் ஜலோட்டில் குறைந்தபட்சமாக 2 பேரும் போட்டியிட்டனர். 2-ம் கட்ட தேர்தலில் சுயேச்சைகள் 851 பேர் போட்டியிட்டனர்.

    லிம்கேடா தொகுதியில் குறைந்தபட்சமாக 1,87,245 வாக்காளர்களும் கட்லோடியாவில் அதிகபட்சமாக 3,52,316 வாக்காளர்களும் இடம்பெற்றிருந்தனர்.

    2 கட்ட தேர்தல்களிலும் மொத்தம் 1828 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 33 மாவட்டங்களின் 37 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    கடந்த 2007-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக 117; காங்கிரஸ் 59 இடங்களில் வென்றது; 2012-ல் பாஜக 119; காங்கிரஸ் 57 இடங்களில் வென்றது.

    தற்போதைய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்திலுமே பாஜகவே ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 92.

    English summary
    The counting of votes for the Gujarat Assembly elections 2017 will be held on Today. The counting will begin at 8 am and results are expected by afternoon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X