குஜராத்தில் தாமரை மீண்டும் மலரும்! காங்கிரஸை விட ஆம் ஆத்மி மோசம் - வெளியான டிவி 9 கருத்துக்கணிப்பு
காந்திநகர்: குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்றும் டிவி 9 குஜராத்தி தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்து இருக்கிறது.
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி மற்றும் 5 ஆம் தேதி 2 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 1 மற்றும் இன்று 2 கட்டங்களாக 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று இன்று மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது.

டிவி 9 கருத்துக்கணிப்பு
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. வரும் டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கும் நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் தற்போது வெளியிட்டு இருக்கின்றன. அதன்படி டிவி 9 குஜராத்தி தொலைக்காட்சி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை சற்று முன் வெளியிட்டு இருக்கிறது.

பாஜக
அதன்படி ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் குஜராத்தில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சி இந்த தேர்தலில் 125 முதல் 130 இடங்களில் வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், 150 க்கும் அதிகமானஇடங்களில் தங்கள் கட்சி வெல்லும் என பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.

காங்கிரஸ்
எதிர்க்கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இந்த தேர்தலை எதிர்கொண்டது. இதில் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 40 முதல் 50 இடங்களில் வெற்றிபெறும் என்று டிவி 9 வெளியிட்டு இருக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அக்கட்சி இம்முறை 10 தொகுதிகளில் கூட வெற்றிபெறாது என்று பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி மோசம்
இந்த தேர்தலில் 3 வது அணியாக களமிறங்கி பெரும் விவாதப்பொருளான அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி எதிர்பார்த்த இடங்களை விட மிகக்குறைவான இடங்களிலேயே வெற்றிபெறும் என இந்த கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. அக்கட்சி வெறும் 3 முதல் 5 இடங்களில் மட்டுமே வெற்றியை பெறும் என டிவி 9 குஜராத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தலைகீழான கணிப்புகள்
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை பொறுத்தவரை காங்கிரஸை விட ஆம் ஆத்மி அதிக இடங்களில் வெல்லும் என்றும், பாஜகவுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் எனவும் தகவல் வெளியாகின. ஆனால், தேர்தலுக்கு பிந்தைய இந்த கருத்துக்கணிப்புகள் அப்படியே தலைகீழாக மாறி இருக்கின்றன.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications