குஜராத்தில் வெள்ளம்... 10 சிங்கங்கள், 1670 காட்டு எருமைகள், 90 மான்கள் பலி
Subscribe to Oneindia Tamil
அஹமதாபாத்: கனமழையால் குஜராத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10 சிங்கங்கள், 1670 காட்டு எருமைகள், 90 மான்கள் உயிரிழந்துள்ளன.
குஜராத்தில் கடந்த மாதம் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் காட்டு விலங்குகள் பல சிக்கின.

இம்மாதம் 2ம் தேதி நிலவரப்படி குஜராத் வெள்ளத்தில் சிக்கி 10 சிங்கம், 1,670 காட்டு எருமைகள், 87 புள்ளி மான்கள், 9 கடமான்கள், 6 காட்டுப்பன்றிகள் ஆகியவை பிணமாக மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான அறிக்கையை அம்மாநில தலைமை வனப்பாதுகாவலர் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பியுள்ளார். மேலும், அந்த அறிக்கையில், அம்ரேலி மற்றும் பாவ்னாநகர் ஆகிய மாவட்டங்களில் 80 சிங்கங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications