பொய் வழக்கு பதிவு.. குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் அதிரடி
அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டில் போதை பொருள் வைத்திருந்ததாக வழக்கறிஞர் மீது பொய் வழக்கு பதிவு செய்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டம் பலான்பூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் சாமர்சிங் ராஜ் புரோகித் என்ற வழக்கறிஞர் தங்கியிருந்தார். ராஜஸ்தானை சேர்ந்த இவர் தங்கியிருந்த அறையில் 1.5 கிலோ அபின் வைத்திருந்ததாக போலீசார் அவரை கைது செய்தனர்.

அப்போது, காவல் ஆய்வாளராக இருந்த வியாஸ் என்பவர், வழக்கறிஞர் ராஜ்புரோஹித் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். ராஜஸ்தானில் இருந்த நிலப்பிரச்சினை தொடர்பாக வழக்கறிஞர் சாமர்சிங் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக, ஐபிஎஸ் அதிகாரியும் சம்பவம் நடந்த போது பலான்பூர் பகுதி எஸ்பியாக இருந்தவருமான சஞ்சீவ் பட் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
பின்னர், அடுத்த சில நாட்களில் கீழமை நீதிமன்றத்தில், அந்த வழக்கறிஞர் அன்று ஹோட்டலில் தங்கவேயில்லை என்று போலீஸ் தரப்பு பதில்மனு தாக்கல் செய்யவே, கோர்ட் அவரை விடுவித்தது. இதையடுத்து, தன்னை கடத்திச் சென்று அடைத்து வைத்ததாக குஜராத் மாநில போலீஸ் அதிகாரி உட்பட 17 பேர் மீது குற்றம்சாட்டி, வழக்கறிஞர் ராஜ்புரோஹித் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இறுதியில்தான் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய தண்டனை சட்டம் 167, 465, 120பி (கிரிமினல் சதித்திட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, போலீஸ் காவலில் இருந்தவர் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சஞ்சீவ் பட் ஆயுள் தண்டைனையை சிறையில் அனுபவித்து வருகிறார்.
கடந்த 2015-ம் ஆண்டு போலீஸ் பணியில் இருந்து நீக்கப்பட்ட சஞ்சீவ் பட், 2018 முதல் சிறையில் இருந்து வருகிறார். ஆயுள் தண்டனை முடிந்த பிறகு தற்போது விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக சஞ்சீவ் பட் வழக்கறிஞர் கூறியுள்ளார். குற்றச்சாட்டுக்களை நீருபிக்க உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications