Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் எக்சிட் போல் LIVE: வெளியானது எக்ஸிட் போல் முடிவுகள்

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்துள்ள நிலையில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலின் எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. டிவி9, நியூஸ் எக்ஸ், இந்தியா டுடே, ரிபப்ளிக் என பல சேனல்கள் இந்த கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

குஜராத்தில் கடந்த 27 வருடமாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. குஜராத் பாஜகவின் கோட்டையாக உள்ளது. 1995ல் இருந்து அங்கு பாஜக ஆட்சிதான் உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கடுமையான மும்முனை போட்டி நிலவியது. 182 தொகுதிகளில் இரண்டு கட்டமாக அங்கு தேர்தல் நடைபெற்றது. அங்கு முதல் கட்ட தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவானது. அங்கு மெஜாரிட்டி பெற 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

இன்னொரு பக்கம் இமாச்சல பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இமாச்சல பிரதேசத்தில் 75.6 சதவிகித வாக்குகள் பதிவானது. அங்கு இதுவரை சட்டசபை தேர்தலுக்கு பதிவான வாக்குகளிலேயே இதுதான் மிக மிக அதிகம் ஆகும். அங்கு மெஜாரிட்டி பெற 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இரண்டு மாநிலங்களுக்கும் டிசம்பர் 8ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளது. இந்த நிலையில் இரண்டு மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. பல்வேறு ஊடகங்கள், கருத்து கணிப்பு நிறுவனங்கள் மேற்கொண்ட கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிந்த பின் இன்று மாலை 6 மணியில் இருந்து வெளியாக உள்ளன.

Gujarat Himachal Pradesh Election 2022 Exit Poll Results LIVE Updates: Who will win?

Dec 05, 2022, 8:41 pm IST
குஜராத்

குஜராத்தில் பாஜக 131-151 இடங்களை பெற்று வெல்லும் - இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு காங்கிரஸ் 16-30 இடங்களை வெல்லும் - இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு ஆம் ஆத்மி 9-21 இடங்களை வெல்லும் - இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு
Dec 05, 2022, 8:33 pm IST

குஜராத் தேர்தல் எக்சிட் போல் கணிப்புகள்
Dec 05, 2022, 7:12 pm IST
குஜராத்

குஜராத்தில் பாஜக 128 - 148 இடங்களில் வெற்றிபெறும் என ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு தகவக் காங்கிரஸ் 30 - 42 இடங்களிலும் ஆம் ஆத்மி 2 - 1 இடங்களிலும் வெல்லும் - ரிபப்ளிக் டிவி
Dec 05, 2022, 7:11 pm IST
ஹிமாச்சல் பிரதேசம்

இமாச்சல பிரதேசத்தில் பாஜக 24-34 தொகுதிகளில் வெற்றி பெறும் - இந்தியா டுடே கருத்துக்கணிப்பு மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 30-40 இடங்களில் வெற்றி பெறும் - இந்தியா டுடே ஆம் ஆத்மி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாது - இந்தியா டுடே பிற கட்சிகள் 4-8 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக்கணிப்பு
Dec 05, 2022, 7:10 pm IST
ஹிமாச்சல் பிரதேசம்

இமாசல பிரதேச எக்ஸிட் போல் முடிவுகள் வெளியானது 68 தொகுதிகள் கொண்ட இமாசல பிரதேசத்தில் பாஜக 35 - 40 இடங்களில் வெல்ல வாய்ப்பு - ஜீ நியூஸ் பிஏஆர்சி காங்கிரஸ் கட்சி 20 - 25 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது - ஜீ நியூஸ் பிஏஆர்சி இமாசல பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சி 3 இடத்தில் வெல்ல வாய்ப்பு உள்ளது - ஜீ நியூஸ் பிஏஆர்சி இதர கட்சிகள் 5 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது - ஜீ நியூஸ் பிஏஆர்சி
Dec 05, 2022, 7:08 pm IST

இதர கட்சிகள் 5 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது - ஜீ நியூஸ் பிஏஆர்சி
Dec 05, 2022, 7:07 pm IST

குஜராத்தில் பாஜக 128 இடங்களில் வெற்றிபெறும்: என்டிடிவி கருத்துக்கணிப்பு
Dec 05, 2022, 7:07 pm IST

காங்கிரஸ் 44 இடங்களிலும், ஆம் ஆத்மி 7 இடங்களிலும் வெல்லும் - என்டிடிவி
Dec 05, 2022, 7:00 pm IST

இமாசல பிரதேச எக்ஸிட் போல் முடிவுகள் வெளியானது
Dec 05, 2022, 7:00 pm IST

68 தொகுதிகள் கொண்ட இமாசல பிரதேசத்தில் பாஜக 34 முதல் 39 இடங்களில் வெல்ல வாய்ப்பு - பி மார்க்
Dec 05, 2022, 7:00 pm IST

காங்கிரஸ் கட்சி 28 முதல் 33 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது - பி மார்க் எக்ஸிட் போல்
Dec 05, 2022, 7:00 pm IST

ஆம் ஆத்மி கட்சி 1 இடத்தில் மட்டுமே வெல்ல வாய்ப்பு உள்ளது - பி மார்க் எக்ஸிட் போல்
Dec 05, 2022, 6:55 pm IST

இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறும் - டைம்ஸ் நவ் -ETG கருத்து கணிப்பு
Dec 05, 2022, 6:55 pm IST

இமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக 34-42 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு - டைம்ஸ் நவ் -ETG
Dec 05, 2022, 6:55 pm IST

காங்கிரஸ் 24-32 மற்றும் ஆம் ஆத்மி ஒரு இடங்களில் கூட வாய்ப்பு இல்லை - டைம்ஸ் நவ் -ETG
Dec 05, 2022, 6:54 pm IST

68 தொகுதிகள் கொண்ட இமாச்சல பிரதேசத்தில் 35 தொகுதிகளை வெல்லும் கட்சி ஆட்சியமைக்கும்
Dec 05, 2022, 6:52 pm IST

இமாச்சல பிரதேசம் எக்சிட் போல்: பாஜக 38, காங்கிரஸ் - 28 இடங்களில் வெற்றி பெறும்
Dec 05, 2022, 6:52 pm IST

டைம்ஸ் ஆஃப் இந்தியா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு
Dec 05, 2022, 6:50 pm IST

குஜராத் எக்சிட் போல்: பாஜக 128 -148 இடங்களை பெற்று வெற்றிபெறும் - ரிபப்ளிக் டிவி கணிப்பு
Dec 05, 2022, 6:50 pm IST

குஜராத் எக்சிட் போல்: காங்கிரஸ் 30 - 42 இடங்களை பெறும் - ரிபப்ளிக் டிவி கணிப்பு
Dec 05, 2022, 6:49 pm IST

குஜராத் எக்சிட் போல்: ஆம் ஆத்மி 2 - 10 இடங்களை பெறும் - ரிபப்ளிக் டிவி கணிப்பு
Dec 05, 2022, 6:48 pm IST

குஜராத் எக்சிட் போல்: பாஜக 128 -148 இடங்களை பெற்று பெற்றிபெறும் - ரிபப்ளிக் டிவி கணிப்பு
Dec 05, 2022, 6:42 pm IST

ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்புகள் வெளியாகின
Dec 05, 2022, 6:42 pm IST

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக 34-39 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு - ரிபப்ளிக் டிவி
Dec 05, 2022, 6:42 pm IST

காங்கிரஸ் 28-33 இடங்களிலும் ஆம் ஆத்மி 0-1 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு - ரிபப்ளிக் டிவி
Dec 05, 2022, 6:39 pm IST

குஜராத் எக்சிட் போல்: பாஜக 125 -130 இடங்களை பெற்று பெற்றிபெறும் - டிவி 9 குஜராத்தி கணிப்பு
Dec 05, 2022, 6:39 pm IST

குஜராத்தில் பாஜக 125 - 130 இடங்களிலும், காங்கிரஸ் 40 - 50 இடங்களிலும், ஆம் ஆத்மி 3 - 5 இடங்களிலும் வெல்லும் - டிவி 9
Dec 05, 2022, 6:38 pm IST

நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி குஜராத்தில் பாஜக 117 - 140 இடங்களில் வெற்றிபெறும்
Dec 05, 2022, 6:38 pm IST

காங்கிரஸ் 34 - 51 இடங்களிலும் ஆம் ஆத்மி 6 - 13 இடங்களிலும் வெல்லும் - நியூஸ் எக்ஸ்
Dec 05, 2022, 6:36 pm IST

குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி என டிவி 9 தொலைக்காட்சி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தகவல்
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+