குஜராத், இமாச்சல் சட்டசபை தேர்தல்: இரு மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றிய பாஜக- Live
குஜராத், இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
அகமதாபாத்/ சிம்லா: குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மைக்குரிய இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.
-குஜராத்: பாஜக- 56; காங்கிரஸ் 49 இடங்களில் வெற்றி
-இமாச்சல்: பாஜக- 9; காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி
-பிரதமர் மோடியின் வாத்நகரை உள்ளடக்கிய மேக்சனா தொகுதியில் தோல்வியை தழுவிய பாஜக
-ஹிமாச்சல பிரதேச தேர்தல்: பாஜக முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமல் சுஜான்பூர் தொகுதியில் பின்னடைவு
-ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில் பிரேம்குமார் துமல் பின்னடைவு
-குஜராத்: பாஜக- 103; காங். 72 தொகுதிகளில் முன்னிலை- 1-ல் பாஜக வெற்றி
-இமாச்சல்: பாஜக -42; காங்- 21ல் முன்னிலை; 1-ல் காங்கிரஸ் வெற்றி
-இதர பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர் அல்பேஷ் தாகுர் ரதன்பூரில் 7,000 வாக்குகள் முன்னிலை
-குஜராத் முதல்வர் விஜய் ரூபானி போராடி வெற்றி
-நாடாளுமன்றத்துக்குள் நுழையும் முன்பாக இரட்டை விரலை உயர்த்தி வெற்றி என காண்பித்தார் பிரதமர் மோடி
#WATCH: Prime Minister Narendra Modi flashes victory sign as he arrives at the Parliament. #ElectionResults pic.twitter.com/Q4PRNjMpoK
— ANI (@ANI) December 18, 2017
-குஜராத்: 175 இடங்களில் பாஜக 99; காங்கிரஸ் 71 தொகுதிகளில் முன்னிலை
-இமாச்சல்: 62 இடங்களில் பாஜக 37; காங்கிரஸ் 22 இடங்களில் முன்னிலை
-குஜராத், இமாச்சலில் பாஜக ஆட்சி அமைக்கும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
-குஜராத்தில் பாஜக 97; காங்கிரஸ் 64 இடங்களில் முன்னிலை
-இமாச்சலில் பாஜக 35; காங்கிரஸ் 22 இடங்களில் முன்னிலை
-குஜராத்தில் 157 தொகுதிகளில் பாஜக 86; காங். 66-ல் முன்னிலை: தேர்தல் ஆணையம்
-இமாச்சலில் 59 தொகுதிகளில் பாஜக 35; காங். 21-ல் முன்னிலை: தேர்தல் ஆணையம்
-32 ஆண்டுகளுக்குப் பின் குஜராத்தில் தனிப்பெரும்பான்மை நோக்கி காங்கிரஸ்
-குஜராத்தில் பாஜக 56; காங்கிரஸ் 50 இடங்களில் முன்னிலை: தேர்தல் ஆணையம்

-இமாச்சல பிரதேசத்தில் பாஜக முதல்வர் வேட்பாளர் குமார் துமால் சுஜன்பூர் தொகுதியில் பின்னடைவு
-தேர்தல் ஆணைய தகவலின்படி குஜராத்தில் பாஜக 49; காங். 42 இடங்களில் முன்னிலை
-இமாச்சல பிரதேசத்தில் பாஜக- 13; காங்கிரஸ் 13 இடங்களில் முன்னிலை

-ஓபிசி தலைவர் அல்பேஷ் தாகுர் முன்னிலை
-குஜராத் முதல்வர், துணை முதல்வருக்கு பின்னடைவு
-தேர்தல் ஆணைய தகவல் படி பாஜக 37; காங். 30 இடங்களில் முன்னிலை
-குஜராத்தில் பாஜகவுக்கு பின்னடைவு எதிரொலி- மும்பை பங்கு சந்தை 700 புள்ளிகள் சரிவு
-குஜராத்தில் முன்னிலை பெறுகிறது காங்கிரஸ்
-டிரெண்ட் மாறுவதால் பாஜக வட்டாரத்தில் கலக்கம்
-தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ தகவலின் குஜராத்தில் காங்கிரஸ் முன்னிலை
-தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ தகவலின் படி குஜராத்தில் பாஜக 17; காங்கிரஸ் 18 இடங்களில் முன்னிலை
-குஜராத் தேர்தல்: பின்னடைவை சந்திக்கும் பாஜக பெருந்தலைகள்
-இமாச்சல பிரதேசத்திலும் நிலைமை மாறுகிறது; பாஜக- காங். இடையே கடும் போட்டி
-குஜராத்தில் பாஜக- காங்கிரஸ் சம இடங்களில் முன்னிலை
-குஜராத்தில் தொடக்கத்தில் பாஜக பெரும் முன்னிலை வகித்தது ஆனால் நிலைமை தற்போது மாற தொடங்கிவிட்டது
-குஜராத்தில் பாஜகவை முந்துகிறது காங்கிரஸ்
-இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பறிகொடுக்கிறது காங்கிரஸ்
-இமாச்சல பிரதேசத்தில் தொடக்கம் முதலே பாஜக முன்னிலை
-வத்காமில் தலித் தலைவர் ஜிக்னேஷ் பின்னடைவு
-ஓபிசி தலைவர் அல்பேஷ் தாகுரும் ரதன்பூர் தொகுதியில் பின்னடைவு
-குஜராத்தில் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவதாக அகமதாபாத் மிர்ரர் தகவல்
-மேஷானா தொகுதியில் குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேல் பின்னடைவு
-ஓபிசி தலைவர் அபிலேஷ் தாகூர் பின்னடை சந்திக்கிறார்
- தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி முன்னிலை
- காங். முன்னாள் தலைவர் மோத்வாடியா போர்பந்தரில் பின்னிலை
-குஜராத், இமாச்சலில் தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை
-குஜராத்: தபால் வாக்குகளில் பெரும் முன்னணியில் பாஜக
-இரு மாநில தேர்தல் வெற்றிக்காக காங். தலைவர் ராகுல் காந்தி வீட்டு முன்பு யாகம் வளர்ப்பு
-குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
-குஜராத்தில் 182, இமாச்சலில் 68 தொகுதிகளுக்கு தேர்தல்
-குஜராத்தில் 37, இமாச்சலில் 42 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
#Visuals from a strong room in #Ahmedabad, ballot boxes brought in for counting #GujaratElection2017 pic.twitter.com/sT6oP9QQzK
— ANI (@ANI) December 18, 2017
-அகமதாபாத் பாஜக அலுவலகத்தில் தேர்தல் முடிவுகளை ஒளிபரப்ப சிறப்பு ஏற்பாடு
Gujarat: Visuals from Election Commission's webcasting control room in Gandhinagar. EC has installed a total of 1251 cameras across 37 counting centres in the state. pic.twitter.com/CfV4y7YUM3
— ANI (@ANI) December 18, 2017
-டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இல்லம் முன்பு தொண்டர்கள் திரண்டனர்
-குஜராத்தில் 37 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 1251 கேமராக்கள் பொருத்தம்
-குஜராத்தில் 37, இமாச்சலில் 42 மையங்களில் வாக்கு எண்ணிக்கை
குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 9,14 என இரு கட்டமாக நடைபெற்றது.
முதல் கட்டமாக 89, 2-வது கட்டமாக 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
#Visuals from BJP Office in #Gandhinagar ahead of counting of votes for all 182 assembly seats in the state, to begin at 8 AM #GujaratElection2017 pic.twitter.com/3zhoX0ubgY
— ANI (@ANI) December 18, 2017
முதல் கட்டமாக டிசம்பர் 9-ந் தேதியன்று குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்சி மற்றும் தெற்கு குஜராத்தில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
Visuals from outside a counting centre set up at Polytechnic College in Vadodara. Heavy security deployed. #GujaratElection2017 pic.twitter.com/8pyjBMjz5I
— ANI (@ANI) December 18, 2017
முதல் கட்டத்தில் 66.75% வாக்குகள் பதிவாகி இருந்தன,
2-வது கட்டமாக வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது.
2-வது கட்டத்தில் 68.41% வாக்குகள் பதிவாகின.
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4.35 கோடி. இவர்களில் 2.97 கோடி பேர் இரு கட்ட தேர்தல்களிலும் வாக்களித்தனர்.
நர்மதா மாவட்டத்தில் அதிகபட்சமாக 79.15%; துவாரகாவில் குறைந்தபட்சமாக 59.39% வாக்குகள் பதிவாகி இருந்தன.
Visuals from counting centres set up in Shimla & Hamirpur #HimachalPradeshElections pic.twitter.com/Z0aSdjTUKp
— ANI (@ANI) December 18, 2017
முதல் கட்ட தேர்தலில் 57 பெண்கள் உட்பட 977 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 443 சுயேச்சைகளும் களம் கண்டனர்,
வடக்கு சூரத் தொகுதியில் 1,57,250 வாக்காளர்கள்தான் இருந்தனர்.
கம்ரேஜ் தொகுதியில் அதிகபட்சமாக 4,28.695 வாக்காளர்கள் இருந்தனர்.
2-ம் கட்ட தேர்தலில் 69 பெண்கள் உட்பட 851 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மகேஷனாவில் அதிகபட்சமாக 34 பேரும் ஜலோட்டில் குறைந்தபட்சமாக 2 பேரும் போட்டியிட்டனர்.
2-ம் கட்ட தேர்தலில் சுயேச்சைகள் 851 பேர் போட்டியிட்டனர்.
லிம்கேடா தொகுதியில் குறைந்தபட்சமாக 1,87,245 வாக்காளர்களும் கட்லோடியாவில் அதிகபட்சமாக 3,52,316 வாக்காளர்களும் இடம்பெற்றிருந்தனர்.
2 கட்ட தேர்தல்களிலும் மொத்தம் 1828 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
33 மாவட்டங்களின் 37 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இமாச்சல பிரதேசத்தின் 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
18 பெண்கள் உட்பட 337 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.
இமாச்சல பிரதேசத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50,25,941.
ஆண்கள் 25,68,761; பெண்கள் 24,57,166.
அதிகபட்சமாக தர்மசாலாவில் 12 பேரும் ஜன் துதாவில் குறைந்தபட்சமாக 2 பேரும் போட்டியிட்டனர்.
சுல்லா தொகுதியில் குறைந்த வாக்காளர்களும் லஹவுலில் அதிகபட்சமான வாக்காளர்களும் இருந்தனர்.
7525 மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
நவம்பர் 9-ந் தேதியன்று 75.28% வாக்குகள் பதிவாகி இருந்தன.
வாக்குகள் அனைத்தும் 42 மையங்களில் எண்ணப்படுகின்றன.
இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications