குஜராத், இமாச்சல் சட்டசபை தேர்தல் முடிவுகள்.. விரைவான கவரேஜை பெற டெய்லிஹன்டை பாருங்கள்
டெல்லி: இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.
இமாச்சலப் பிரதேசத்துக்கு நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஹிமாச்சலப் பிரதேசம்
'வளர்ச்சி' மற்றும் 'டபுள் இன்ஜின்' அரசு என்பதையே முன்னிறுத்தி பாஜக இந்த முறை இமாச்சல பிரதேசத்தில் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தத் தேர்தலில் வென்று வரலாற்றுச் சாதனையைப் படைக்க பாஜக முயலும் பாஜகவுக்கு இது முக்கிய சோதனை. மறுபுறம் கம்பேக் கொடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. ஆளும் பாஜக வளர்ச்சி என்பதை முன்னெடுத்துத் தேர்தலை வெற்றியை எதிர்பார்க்கிறது என்றால், மறுபுறம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒன்பது மாநிலங்களில் தோல்வியடைந்துள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ் கம்பேக் கொடுக்க துடிக்கிறது. அங்குக் கடந்த பல தேர்தல்களாகவே ஆளும் கட்சி வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பரபரப்பான அரசியல் களத்தில் 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்களின் தலைவிதியை 55 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தீர்மானித்துள்ளனர். இதில் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங், மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் ஆகியோர் அடங்குவர்.
அங்கு பாஜக மோடியை முன்னிறுத்தி பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. அங்குப் பொதுமக்களுக்குத் தனிப்பட்ட வேண்டுகோளுடன் பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தை முடித்தார். பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் தனது பலத்தை அதிகரிக்கும் என்று மோடி கூறினார். பாஜகவை மீண்டும் தேர்வு செய்வதன் மூலம் கிடைக்கும் 'டபுள் எஞ்சின்' அரசு அனைத்துத் துறை வளர்ச்சிக்காகப் பாடுபடும் என்றார்.
பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தலைமையில் காங்கிரஸ் கட்சி இம்மாச்சல் பிரதேச தேர்தலை எதிர்கொண்டது. அதேபோல இமாச்சல் பிரதேசத்தில் முதல்முறையாகக் களமிறங்கும் ஆம் ஆத்மி 68 இடங்களில் 67 இடங்களில் போட்டியிட்டது. அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தான் நேரடி போட்டி நிலவுவதால், ஆம் ஆத்மி சற்று அமைதியாகவே இருந்து வருகிறது.

குஜராத்
குஜராத்தில் 1995 முதல் பாஜக ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் கட்சி சுமார் 40 சதவிகித வாக்குகளைப் பெற்ற போதிலும் கூட, பாஜக கடந்த 20 ஆண்டுகளாக அங்கு ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
குஜராத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான இடங்களில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. இம்மாச்சல பிரதேசத்தைப் போலவே குஜராத்திலும் ஆம் ஆத்மி களமிறங்குகிறது. இது எப்போதும் குஜராத்தில் இருக்கும் இரண்டு முனை போட்டியை மும்முனை போட்டியாக மாறியுள்ளது.
அங்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 99 இடங்களையும், காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றியது.
தற்போது, 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாஜகவின் பலம் 111ஆக உள்ளது.. காங்கிரஸ் கட்சியில் இருந்து பல எம்எல்ஏக்கள் விலகி பாஜகவில் ஐக்கியமானதே இதற்குக் காரணம்.
டெய்லிஹன்ட் கவரேஜ்
இரு மாநிலச் சட்டசபைத் தேர்தல்களின் நேரடி கவரேஜ்ஜை டெய்லிஹன்ட் செய்கிறது. தேர்தல் என்பது வெறும் எண்கள் அடிப்படையாகக் கொண்டது இல்லை. ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தேர்தல் குறித்த துல்லியமான விளக்கத்தைத் தர டேட்டா, சார்டுகள் பகுப்பாய்வு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறோம்.
தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய உடன், அனைத்து கோணங்களில் இருந்தும் தேர்தல் முடிவுகளைப் பகுப்பாய்வு செய்து உங்களுக்குத் தரவுள்ளோம். டேட்டாக்கள் என்ன சொல்ல வருகிறது என்பதைத் தெளிவாக முன்வைப்போம்.
அரசியல் என்றால் என்னவென்றே தெரியாதவரில் இருந்து அரசியல் நிபுணர் வரை அனைவருக்கும் புரியும் வகையில் முடிவு தேர்தல் முடிவுகள் வழங்கப்படும்.
டெய்லிஹன்ட்-இல் நாங்கள் உங்களுக்குத் தெளிவாக கவரேஜைப் தரவுள்ளோம்
தேர்தல் முடிவுகளைத் தெளிவாகவும் மின்னல் வேகத்திலும் டேட்டா வடிவில் வழங்கப்படும்
எத்தனை இடங்களில் வென்றுள்ளனர் என்பதைக் கடந்த கால முடிவுகளுடன் ஒப்பிட்டு வழங்கப்படும்
மாநிலத்தில் எத்தனை இடங்களைக் கட்சி கைப்பற்றியுள்ளது அல்லது இழந்துள்ளது என்பது குறித்த தகவல்கள்.
சமூக வலைத்தளங்களில் மக்கள் ரிஆக்ஷன் என்ன என்பது குறித்து விளக்கப்படும்
நேரலை வீடியோக்கள், மீம்கள், ட்ரெண்டிங் ஸ்டோரி, என விரிவான தேர்தல் கவரேஜை எங்களிடம் இருந்து பெறலாம்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications