லுடோவால் வந்த லடாய்.. மனைவியை கண்ணுமண்ணு தெரியாமல் விளாசிய கணவர்.. லாக்டவுனில் வெறித்தனம்
லூடோ விளையாட்டு வினையில் முடிந்து கணவன் மனைவியை சரமாரி அடித்துவிட்டார்
வதோதரா: என்ன கொடுமை பாருங்க.. லாக்டவுனால் வீட்டோடு இருக்கும்போதுதான் குடும்ப வன்முறை அதிகமாக இருக்கிறது. இது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வதோதராவில் ஒரு புருஷன் தனது மனைவியை கொடூரமாக அடித்ததில் அவரது முதுகெலும்பு காயமடைந்து விட்டதாம். இத்தனைக்கும் சாதாரண ஆன்லைன் விளையாட்டால் வந்த வினை இது.
லுடோ கேம்.. இதுதான் அந்தப் பெண்ணை இப்போது காயப்படுத்த காரணமாக அமைந்த ஆன்லைன் விளையாட்டு. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அந்தப் பெண். தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருந்து வருகிறார். இவரது கணவர் குழந்தைகளும் கூட வீட்டிலேயே இருந்து வருகிறார்கள்.

போரடிக்குதே என்பதற்காக ஆன்லைனில் இந்த லூடோ கேமை கண்டுபிடித்து கணவனும், மனைவியும் விளையாட ஆரம்பித்தனர். போகப் போக அதில் ஈடுபாடு அதிகமாகி தீவிரமாக தொடர ஆரம்பித்து விட்டனர். இதில் அந்தப் பெண்தான் எப்பவும் ஜெயிப்பாராம். மனைவியிடம் தோற்றுப் போவதே கணவருக்கு வேலையாகப் போய் விட்டது.
என்ன இது நம்மை எப்பவுமே இவ தோக்கடிச்சிட்டிருக்காளே என்று மனைவி மீது கோபமாகி விட்டார் கணவர்.. மனசுக்குள் ஆண் திமிரும் சேர்ந்து கொள்ள அந்தப் பெண்ணை நையப்புடைத்து விட்டார். அடித்த அடியில் அப்பெண்ணின் முதுகெலும்பு காயமடைந்து விட்டதாம். இதனால் வலியில் துடித்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சையில் அப்பெண் உள்ளார்.
இதுகுறித்து மன நல ஆலோசகர்கள் கூறுகையில், இது குடும்ப வன்முறையாகும். இதற்கு முக்கியக் காரணம் தன்னை அடிக்கடி தோற்கடித்துக் கொண்டிருக்கிறாளே என்று மனைவி குறித்து வந்த ஈகோதான். தன்னை விட மனைவி ஸ்மார்ட் ஆக இருப்பதை பெரும்பாலான கணவர்கள் விரும்ப மாட்டார்கள். அந்த ஆணாதிக்க மனோபாவம்தான் இந்த நபரிடமும் இருந்துள்ளது. அது கோபமாக வெளிப்பட்டு மனைவியை அடித்து காயப்படுத்தியுள்ளார்.
ஆனால் தனது கணவர் மீது அந்தப் பெண் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை. இதனால் போலீஸாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கணவரும் மனைவியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இனிமேல் இதுபோல நடந்தால் அவ்வளவுதான் என்று போலீஸாரும் அந்த நபரை எச்சரித்து விட்டு விட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications