குஜராத்: ஜூனாகத் தர்கா விவகாரத்தில் போலீஸுடன் பயங்கர மோதல்- ஒருவர் பலி; 174 பேர் கைது!
ஜூனாகாத்: குஜராத் மாநிலம் ஜூனாகாத் நகரில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட தர்காவை அகற்ற முயற்சித்த போது போலீசாருடன் ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தின் ஜூனாகத் நகர் கோட்டைக்குள் இருப்பது போன்ற கட்டமைப்பைக் கொண்டது. இதன் மஜேவாதி கேட் பகுதியில் ஒரு தர்கா அமைந்துள்ளது. இந்த தர்கா அரசு நிலத்தில் கட்டப்பட்டது என்பது குற்றச்சாட்டு.

மேலும் அரசு நிலத்தில் கட்டப்பட்ட தர்காவை அகற்ற ஜூனாகாத் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இம்மோதல் நேற்று இரவு பெரும் வன்முறையாக வெடித்தது.
ஜூனாகாத் மஜேவாதி கேட் பகுதியில் நேற்று இரவு போலீசார் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. போலீசார் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்து வருகின்றனர். இதுவரை 174 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை பிற மாவட்டங்களுக்கும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications