குஜராத் மாநகராட்சி தேர்தல் வாக்குப் பதிவு.. வாக்களித்தார் அமித்ஷா-பாஜக, காங்., ஆம் ஆத்மி பலப்பரீட்சை
அகமதாபாத்: குஜராத் மாநகராட்சிகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
குஜராத் மாநிலத்தின் 6 மாநகராட்சிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தலில் மொத்தம் 1.14 கோடி பேர் வாக்களிக்கின்றனர். இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் இடையேதான் இதுவரை போட்டி இருந்து வந்தது. இந்த முறை ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறது. மொத்தம் 575 இடங்களுக்கான தேர்தலில் 2,276 பேர் போட்டியிடுகின்றனர்.
பாஜக சார்பில் அதிகபட்சமாக 577 பேரும் காங்கிரஸ் 566 பேரையும் ஆம் ஆத்மி கட்சி 470 பேரையும் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது. வதோதரா மாநகராட்சியில் குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி இன்று வாக்களித்தார்.

அகமதாபாத்தின் நாரன்புராவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலையில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (பிப்.23) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அண்மையில் பஞ்சாப் மாநில உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. டெல்லியில் விவசாயிகள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் பஞ்சாப் விவசாயிகள் பெருமளவு பங்கேற்றுள்ளனர். இதனால் பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications